Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
தலைமுடி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பு!
Hair Care Tips In Tamil: ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பு மேற்கு ஆப்பிரிக்காவில் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக கானா மற்றும் நைஜீரியா பகுதிகளில் இந்த ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பு தயாரிக்கப்படுகிறது. இந்த ஷாம்பு பல இராசயனங்கள் மற்றும் செயற்கை பொருட்கள் இல்லாமல் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது.
இயற்கையான தாவர மூலங்களை பயன்படுத்தி இந்த ஷாம்பு தயாரிக்கப்படுகிறது. இது தலைமுடிக்கு போதுமான ஈரப்பதத்தையும், பளபளப்பையும் தரக் கூடியது. இந்த ஷாம்பில் இயற்கையான எண்ணெய்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

எனவே இயற்கையான ஒரு ஷாம்புவை நீங்கள் வாங்க நினைத்தால் அதற்கு இது ஏதுவாக இருக்கும். இந்த ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பு உங்கள் கூந்தலுக்கு எந்த மாதிரியான நன்மைகளை தருகிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பு (African Black Soap Shampoo)
ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பு சுத்தமான முடி மற்றும் ஆரோக்கியமான உச்சந்தலையை தர உதவுகிறது. இந்த ஷாம்பு உச்சந்தலையில் உள்ள அதிக அழுக்கு, எண்ணெய் மற்றும் குப்பைகளை நீக்க உதவுகிறது. இது உங்கள் உச்சந்தலையை மென்மையாகவும், சருமத்தை மென்மையாகவும் வைக்க உதவுகிறது.
இதிலுள்ள இயற்கையான சத்துக்களான இரும்புச் சத்து, பிற அத்தியாவசிய எண்ணெய்கள் போன்றவை கூந்தலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இந்த ஷாம்பை லேசாக கூந்தலில் தேய்த்து வர நல்ல ஆரோக்கியமான போஷாக்கு கிடைக்கும். பொடுகு, பிளவுபட்ட முனைகள், உச்சந்தலை அரிப்பு மற்றும் வறட்சி இல்லாத ஆரோக்கியமான முடியை நீங்கள் பெற முடியும்.
ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பு நன்மைகள்
ஸ்பா வகை குளியல்
உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைக்க நீங்கள் ஸ்பாக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பை பயன்படுத்தி வீட்டிலேயே ஸ்பா வகை குளியலை நீங்கள் பெறலாம்.
இயற்கை பொருட்கள் அடங்கிய ஷாம்பு
இந்த ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பில் ஆலிவ் எண்ணெய், பாமாயில், வெஜிடபிள் கிளிசரின், கற்றாழை, முனிவர் செடி , நெட்டில், அல்ஃப்ல்ஃபா, லாவெண்டர், கெமோமில், முல்லீன், ஜோஜோபா, திராட்சை விதை, ஜோஜோபா, அவகேடா, ஹெடெரா ஹெலிக்ஸ் ஐவி, சாதிக்காய் போன்ற பல பொருட்கள் உள்ளன.
கண்டிஷனராக செயல்படுகிறது
இந்த ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பு ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. இது க்ளீன்சர், கண்டிஷனர், மாய்ஸ்சரைசர் மற்றும் ஸ்டைலிங் பொருளாக செயல்படுகிறது.
முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது
இந்த ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பு முடி உதிர்தலை கட்டுப்படுத்தி முடியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவுகிறது.
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
இந்த ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பு உச்சந்தலையில் நல்ல இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மோசமான இரத்த ஓட்டம் கூந்தல் உதிர்தலை ஏற்படுத்தும். மயிர்க்கால்களை ஊட்டச்சத்துடன் வலிமைப்படுத்த உதவுகிறது. முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
வெயில் பாதிப்பில் இருந்து கூந்தலை பாதுகாக்கிறது
இந்த ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பு சூரிய ஒளியால் கூந்தலுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. உங்கள் சருமத்தையும் கடுமையான வெயிலில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
புதினா எண்ணெய் மற்றும் பனை கரு எண்ணெய்
இந்த பிளாக் சோப் ஷாம்பில் சேர்க்கப்பட்டுள்ள புதினா எண்ணெய் பொடுகுத் தொல்லை மற்றும் அரிப்பில் இருந்து உச்சந்தலையை காக்க உதவுகிறது. பனை கரு எண்ணெய் மற்றும் மனுகா தேன் ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. இது வறண்ட முடி பாதிப்பில் இருந்து நம்மை காக்கிறது. இது கூந்தல் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.
இயற்கையான சுருட்டை முடியை பெற முடியும்
இந்த ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பு உங்களுக்கு இயற்கையான சுருட்டை முடி லுக்கை கொடுக்க உதவும். இதிலுள்ள புரோட்டீன் மற்றும் அமினோ அமிலங்கள் கூந்தலுக்கு நல்ல ஈரப்பதத்தை அளிக்கிறது.
ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பு ஊட்டச்சத்துக்கள்
ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பில் நிறைய போஷாக்குகள் காணப்படுகிறது. இதில் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி போன்ற ஏராளமான சத்துக்கள் காணப்படுகிறது. இதிலுள்ள வைட்டமின் சி சரும மற்றும் கூந்தல் பிரச்சினைகளை எதிர்த்து போராட உதவுகிறது. முகப்பருக்கள் மற்றும் நோய்களை தடுப்பதில் ஆப்பிரிக்க பிளாக் சோப் ஷாம்பு உதவுகிறது.
இதைத் தவிர இதில் நிறைய மூலிகைகள், அத்தியாவசிய எண்ணெய்கள், இயற்கை பொருட்கள், கிளிசரின் போன்ற ஏராளமான பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இவை உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.



Click it and Unblock the Notifications
