Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
முகத்தை பிரகாசமாக வைக்கும் 4 அருமையான ஃபேஸ் பேக்குகள்!!
அழகான முகம் கிடைக்கவும், பிரகாசமாக அமையவும் இயற்கையான ஃபேஸ் பேக் தயாரிக்க நீங்கள் செய்ய வேண்டிய செய்முறைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
இப்போது மார்க்கெட்களில் பல கிரீம்கள் முகத்தை பிரகாசமாக்க முடியும் என்று விளம்பரப்படுத்துகின்றனர்.ஆனால் இவை உண்மையா?இல்லை,மாற்றாது.சருமத்தின் நிறத்தைப் பற்றிய கவலையின்றி இயற்கையான நிறத்தில் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இருங்கள்.இதுவே முகத்திற்கு பிரகாசத்தைக் கொடுக்கும்.
உண்மையான விசயம் என்னவெனில் முகத்தை இயற்கையாக பிரகாசமாகவும்,வயதான அறிகுறிகள் தென்படாமல் இருப்பதற்கும் விலை உயர்ந்த அழகு பொருட்கள் தேவை இல்லை.அதற்கு பதிலாக சமையலறையில் உள்ள சில பொருட்கள் இயற்கையாகவே முகத்தை பொலிவுடனும்,பிரகாசமாகவும் மாற்றும்.

1.மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் :
இது சிறந்த குளிர்ந்த தன்மையுள்ள மூலப்பொருள்,ஆன்டிபயாடிக் மட்டுமல்ல சில கிருமிகளையும் அழிக்கக்கூடிய குணங்களைக் கொண்டுள்ளது.இந்த மஞ்சளை ரோஜா நீரில் கலந்து முகத்தில் தடவ வேண்டும்.காய்ந்ததும் முகத்தை அலச வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகம் பிரகாசமாக மாறும்.

2.கடலை மாவு மற்றும் கடுகு எண்ணெய் :
கடலை மாவை கடுகு எண்ணெய் மற்றும் பாலுடன் கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை முகம் மற்றும் உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும்.இதை குளிக்கும் முன் செய்ய வேண்டும்.சிறிது நேரம் கழித்து உலர்ந்ததும் குளிக்க வேண்டும்.இவை இறந்த செல்களை வெளியேற்றுகிறது மற்றும் தோலை ஈரப்பதமாகவும் வைக்க உதவுகிறது.மேலும் முகத்தை பிரகாசமாகவும் மாற்றும்.

3.பால்:
பால் சிறந்த சுத்தப்படுத்தி ஆகும்.இதை எளிதாக சந்தைகளில் வாங்கவும் முடியும் மற்றும் செயற்கை ரசாயனங்கள் கலக்காத இயற்க்கை பொருள் ஆகும்.
சிலருக்கு செயற்கை ரசாயனங்கள் கலந்த சுத்தப்படுத்திகளை உபயோகித்தால் தோலில் அலர்ஜி போன்று ஏற்படும்.அவர்களுக்கு இந்த பால் சிறந்தது.பாலை தினமும் முகத்தில் தடவி காய்ந்ததும் குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.இவ்வாறு செய்வதால் சருமம் பொலிவாக இருக்கும்.

4.தயிர் மற்றும் குங்குமப் பூ :
தயிர் சிறந்த மாஸ்க்காக செயல்படுகிறது.தயிருடன் குங்குமப் பூ கலந்த நீரை கலந்து கொள்ள வேண்டும்.இதை முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும்,காய்ந்ததும் வெது வெதுப்பான நீரில் அலச வேண்டும்.
இந்த 4 ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை இயற்கையாகவே பொலிவாகவும்,பிரகாசமாகவும் மாற்றுங்கள்.



Click it and Unblock the Notifications