Latest Updates
-
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
இந்த 5 ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை சீரியல் மாதிரி எப்பவும் சோகமாகவே இருக்குமாம்..உங்க ராசி இதுல இருக்கா?
ஒருவரின் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் இருந்தாலும் அவர்களின் திருமண வாழ்க்கை சரியாக அமையா விட்டால் அவர்களுடைய வாழ்க்கை முழுமையற்றதுதான். சிலர் வாழ்க்கையில் எவ்வளவுதான் முயற்சித்தாலும் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்காது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அதிர்ஷ்டமில்லாதவர்களாக இருப்பார்கள். சில ராசிக்காரர்கள் திருமணத்திற்குப் பிறகு போராட்டங்களுக்கு ஆளாக நேரிடலாம், ஆனால் இந்த சிரமங்களை சில யுக்திகள் மூலம் சரிசெய்து கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்வில் அதிக சிரமங்களை சந்திப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் உக்கிரமான மற்றும் உணர்ச்சிவசப்படும் தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் தீவிர ஆர்வம் ஆரம்பத்தில் உற்சாகமானதாக இருந்தாலும், அது திருமணத்திற்குள் மோதல்களுக்கும் வழிவகுக்கும். அவர்கள் பெரிய கோபக்காரர்கள், சிறிய விஷ்யங்களுக்குக் கூட அதிகமாக கோபப்படுவார்கள்.
மேஷ ராசிக்காரர்கள் கடினமான சூழ்நிலைகளில், குறிப்பாக அவர்களின் திருமணத்தில் சண்டைகளின் போது அமைதியாக வைத்திருப்பது மிகவும் கடினம். அவர்களின் கோபம் தீர்ந்து மன்னிப்பு கேட்பதற்குள் அதை சமாளிப்பது அவர்களின் துணைக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பெரும்பாலும் கடுமையான பிடிவாதக்காரர்களாகக் கருதப்படுகிறார்கள், ஏனெனில் அவர்களின் வலுவான விருப்பமும், எதார்த்தமான அணுகுமுறையுமே இதற்கு காரணம். இது திருமணத்தில் ஆதிக்கம் செலுத்துதல் மற்றும் மோதல்களை உருவாக்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கும். அவர்கள் தங்கள் முடிவுகளுக்கு எதிராக துணை நடந்து கொள்ளும் போது மிகவும் கடுமையாக கோபப்படுவார்கள். அவர்களின் பிடிவாதமும், கோபமும் அவர்களின் திருமண வாழ்வை நரகம் போல மாற்றும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் இரட்டை ஆளுமை, ஒரு உறவில் சரியான முடிவெடுக்க இயலாமை மற்றும் சீரற்ற தன்மையாக வெளிப்படும். இது அவர்களின் துணைக்கு தவறான புரிதல்கள் மற்றும் விரக்திகளுக்கு வழிவகுக்கும்.
அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே நபருடன் தங்க விரும்புவதில்லை. பரபரப்பான வேலை சூழலில் பிஸியாக இருப்பதால், அவர்கள் தங்கள் துணைக்கு நேரம் ஒதுக்குவதில்லை, இதன் விளைவாக அவர்களின் திருமண வாழ்வு பிரிவில் முடிய வாய்ப்புள்ளது. சொல்லப்போனால் அவர்கள் அதனை நினைத்து கூட வருத்தப்பட மாட்டார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அனைத்து விஷயத்திலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்றும், அனைத்து விஷயங்களையும் திட்டமிட்டு சரியாக செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பவர்கள். அவர்களின் இந்த குணம் அவர்களுடைய திருமண வாழ்க்கையிலும் நீள்கிறது. அவர்கள் தங்களைப் போலவே தங்கள் துணையும் அனைத்து விஷயங்களிலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.
இது அவர்களின் திருமணத்திற்குள் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும், ஏனெனில் அவர்களின் துணை வாழ்நாள் முழுவதும் அனைத்து விஷயங்களிலும் சரியானவராக இருக்க வேண்டிய கூடுதல் சுமை எப்போதும் அவர்கள் மேலிருக்கும். இது அவர்களுக்கு கடுமையான விரக்தியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரம் மற்றும் சாகசத்தை விரும்புவதற்கு பெயர் பெற்றவர்கள். திருமணத்தில், அவர்களின் சுதந்திரத்திற்கான தேவையும், ஆசையம் அவர்களின் துணைக்கு உணர்ச்சிரீதியான தூரத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கும்.
அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணை உட்பட யாரையும் தங்கள் எல்லைக்கும் அவ்வளவு சீக்கிரம் அனுமதிக்க மாட்டார்கள். பிணைக்கப்பட்ட திருமண உறவை விட சுதந்திரமான வாழ்க்கைக்கு அவர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
