Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி
இந்த 4 ராசிக்காரங்க வெள்ளி அணிவது அவர்களின் கோடீஸ்வர யோகத்தை முழிச்சிக்க வைக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அனைத்து உலோகங்களிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சனிபகவான் இரும்பை ஆள்வது போல, குருபகவான் தங்கத்தை ஆள்வது போல, சந்திரன் வெள்ளியை ஆள்கிறார். ஜோதிடத்தின்படி, சந்திரன் தண்ணீருடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது, இந்த கிரகம் குளிர்ச்சி மற்றும் நிலையற்ற தன்மையின் காரணியாகும்.
ராசி சக்கரத்தில் சில ராசிகள் நெருப்பு ராசிகளாகவும், சில ராசிகள் நீர் ராசிகளாகவும், சில ராசிகள் பூமி ராசிகளாகவும், சில ராசிகள் காற்று ராசிகளாகவும் அங்கீகரித்து வருகின்றன. ஆனால் ராசியில் வெள்ளி நகைகளை அணியக் கூடாத 3 ராசிகள் உள்ளன. மேஷம், தனுசு மற்றும் சிம்மம், இந்த மூன்று ராசிகளும் நெருப்பு உறுப்பு ராசிகள் என்று அழைக்கப்படுகின்றன. அவர்கள் சந்திரன் ஆளும் வெள்ளியை அணியக்கூடாது.

நெருப்பு ராசியை சேர்ந்தவர்கள் வெள்ளி நகைகளை அணிவது அவர்கள் வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும், அதேசமயம் நீர் ராசிகள் வெள்ளி அணிவது அவர்களின் அதிர்ஷ்டக்கதவை திறக்க உதவும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் வெள்ளி அணிவது அவர்களின் வாழ்க்கையில் பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
யாரெல்லாம் வெள்ளி அணிய வேண்டும்?
ஜோதிடத்தின்படி, வெள்ளி உலோகம் சந்திரன் மற்றும் சுக்கிரனுடன் ஒரு சிறப்புத் தொடர்பைக் கொண்டுள்ளது. மேலும், வெள்ளி சிவபெருமானின் கண்களிலிருந்து உருவானதாக புராணங்கள் கூறுகிறது. சிவனின் கண்களுடன் தொடர்புடைய இந்த புனித வெள்ளி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து படி, வெள்ளி வைத்திருக்கும் வீடு அல்லது நபரின் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் நிறைந்திருக்கும். குறிப்பாக பெரியவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் வெள்ளி நகைகள் சிறப்பான அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, வெள்ளியைப் பயன்படுத்துவது நமது வாழ்க்கையில் சுக்கிரனை வலுப்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது. வீட்டில் வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது சுக்கிரனை மகிழ்ச்சியடையச் செய்கிறது மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதேபோல சுண்டு விரலில் வெள்ளி மோதிரம் அணிவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் வெள்ளி அணிவது அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
அதிர்ஷ்ட ராசிகள்
ஜோதிடத்தில், வெள்ளி நகைகள் ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளுக்கு மிகவும் மங்களகரமானவை என்று நம்பப்படுகிறது. இந்த ராசிகள் நீர் ராசிகளாக கருதப்படுகின்றன, மேலும் வெள்ளி நீர் ராசிகளை ஆளும் உலோகமாக இருப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு வெள்ளி அணிவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் வெள்ளி அணிவதால் அடையும் நன்மைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் வெள்ளி உலோகத்தைப் பயன்படுத்த வேண்டும் அல்லது அவர்கள் வெள்ளி நகைகளை அணிய வேண்டும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை வெள்ளி மோதிரம் அல்லது லாக்கெட் அணிவது அவர்களுக்கு சிறப்பான அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இதன் மூலம், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் வெள்ளி உலோகத்தை அணிவது அவர்களுக்கு சிறப்பான பலன்களைக் கொடுக்கும். என்று கூறப்படுகிறித்து. திங்கட்கிழமை வெள்ளி உலோகத்தை அணிவது சிறப்பு பலன்களைத் தரும். வெள்ளி, பித்தளை மற்றும் தங்க உலோகங்களைத் தவிர்த்து மற்ற உலோகங்களையும் அணியலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதும் செம்பு அல்லது வெள்ளி நிறத்தில் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இது அவர்களுக்கு சிறப்பு நன்மைகளைத் தரும். மேலும் வெள்ளி அணிவது உள்ளுணர்வை வெளிப்படுத்த உதவுகிறது, எதிர்மறை ஆற்றலிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் உள் அனுபவங்களை சமாளிக்க உதவுகிறது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு வெள்ளி சிறந்தது. உங்கள் ஜாதகத்தில் சந்திரன் அசுப நிலையில் இருந்தால், மற்றவர்களிடமிருந்து எந்த வெள்ளிப் பொருளையும் பரிசாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. உங்கள் தாயிடமிருந்து வெள்ளி மோதிரத்தை பரிசாக அணிந்தால், அதன் பலன்கள் இரட்டிப்பாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
