Latest Updates
-
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
இந்த 4 ராசிக்காரங்க ஒருபோதும் பணத்துக்காக காதலிக்க மாட்டார்களாம்... இவங்களுக்கு காதல்தான் ரொம்ப முக்கியமாம்...
பொதுவாக உலகின் மிகவும் சக்திவாய்ந்த பொருள் என்னவென்றால் பணம் என்று கூறுவார்கள், ஆனால் பணத்தை விட சக்திவாய்ந்த ஒன்று உள்ளது, அதுதான் காதல். காதலின் சக்தி மகத்தானது மற்றும் இணையில்லாதது. எவ்வளவு பெரிய தடையையும் தாண்டி ஒருவரை அடையும் சக்தியையும், ஆற்றலையும் காதல் கொடுக்கும்.
காதல் என்பது மிகவும் ஆறுதலான உணர்வு, அதனால்தான் அனைவரும் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சிலருக்கு காதலை விட பணம் முக்கியமாக இருக்கலாம், ஆனால் சிலருக்கோ பணத்தை விட காதலே மிகவும் முக்கியமானதாக இருக்கும். பணம் எவ்வளவு சக்திவாய்ந்ததாகவோ அல்லது செல்வாக்கு மிக்கதாகவோ இருந்தாலும், அவர்கள் எப்போதும் காதலுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அவர்களின் இந்த குணத்திற்கு அவர்களின் பிறந்த ராசி முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் பணத்தை விட காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
ராசி சக்கரத்தின் அன்பான ஆன்மாக்களான கடக ராசிக்காரர்களுக்கு காதல் மற்றும் அன்பை விட பணம் முக்கியமானதல்ல. அவர்கள் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் அனைத்தையும் விட உயர்வாகக் கருதுகிறார்கள். தங்கள் அன்புக்குரியவர்கள் காயப்படுவதைப் பார்க்க அவர்களால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. கோடி முறை அவர்களிடம் பணத்தைக் கொடுத்தாலும் அவர்கள் எப்போதும் அன்பைதான் தேர்ந்தெடுப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக பணத்தின் மீது ஆசை கொண்டவர்களாக இருக்கலாம், ஆனால் பணமா அல்லது காதலா என்று வரும்போது அவர்கள் எப்போதும் காதலுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். காதலுக்கும், அன்புக்கும் இடையில் போட்டி வைக்கும்போது அவர்கள் ஒரு நொடி கூட தாமதிக்காமல் காதலின் பக்கம் சாய்வார்கள். அவர்களை பணக்கஷ்டத்தில் இருந்தால் கூட தங்கள் துணையின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எதார்த்தவாதிகள் மற்றும் லாஜிக்காக சிந்திக்கக் கூடியவர்கள், ஆனால் காதல் தொடர்பான விஷயங்கள் என்று வரும்போது அவர்கள் தங்களின் லாஜிக்கை புறந்தள்ளிவிட்டு காதலைத் தேர்ந்தெடுப்பார்கள்.
தங்கள் அன்புக்குரியவர் ஆபத்தில் இருந்தாலோ அல்லது அவர்களுக்கு தங்களின் உதவி தேவைப்பட்டாலோ எவ்வளவு பணத்தை இழந்தாலும் அவர்களிடம் ஓடிச்சென்று விடுவார்கள். கன்னி ராசிக்காரர்கள் காதல் விஷயத்தில் மிகவும் பிடிவாதமானவர்கள், எனவே அவர்கள் ஒருபோதும் தங்கள் காதலை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் காதல் மற்றும் விருப்பங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். எனவே அவர்கள் ஒருபோதும் பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. பணம் ஒரு நாள் தீர்ந்துவிடும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள், அதேசமயம் காதல் ஒருபோதும் அழியாது என்று அவர்கள் நம்புகிறார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் தொடர்ந்து காதலை தேடுபவர்கள். தங்களை யாராவது ஒருவர் மிகவும் நேசிக்கிறார்கள் என்று அவர்கள் உணர்ந்தால் அவர்களுக்காக எதையும் செய்வார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
