Latest Updates
-
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்..
இந்த 4 ராசிகளில் பிறந்த ஆண்கள் ரொம்ப கண்டிப்பான அப்பாவாக இருப்பார்களாம்... இவங்கள சமாளிக்கவே முடியாது...!
ஒரு குடும்பத்தின் ஆணி வேராக இருப்பது தந்தைதான். அனைத்து குழந்தைகளுக்குமே முதல் ஹீரோ அவர்களின் தந்தைதான். ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் தந்தையின் ஆதரவும், உத்வேகமும் அவசியம்.
ஒவ்வொரு தந்தையும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். சில தந்தைகள் நண்பர்கள் போல வேடிக்கையானவர்களாகவும், கூலாகவும் இருக்கும் அதேசமயத்தில் சில தந்தைகள் மிகவும் கண்டிப்பான மற்றும் அதிகாரம் செலுத்தும் தந்தையாக இருப்பார்கள்.

ஜோதிட சாஸ்திரம் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள மட்டுமல்ல அவர்கள் எப்படிப்பட்ட தந்தையாக இருப்பார்கள் என்பதையும் நிர்ணயிக்கிறது. அதன்படி சில ராசிகளில் பிறந்த ஆண்கள் மிகவும் கண்டிப்பான தந்தைகளாக இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் அவர்கள் உண்மையான அக்கறைக் கொண்டிருந்தாலும் அவர்கள் அதை கண்டிப்புடன்தான் வெளிப்படுத்துவார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் கண்டிப்பான தந்தையாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசி அப்பாக்கள் இயல்பிலேயே மிகவும் உறுதியானவர்களாகவும், பிடிவாதக்காரர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் ஒரு விஷயம் சொன்னால் அதுதான் இறுதி வார்த்தை, அவர்கள் குழந்தைகள் எவ்வளவு கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், அது குடும்பத்தில் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. எனவே ரிஷப ராசி அப்பாக்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாகவும், குழந்தைகளை சரியான பாதையில் வழிநடத்த அவர்கள் மீது நிறைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை விதிப்பார்கள்.
கன்னி
கன்னி ராசி அப்பாக்கள், பர்பெக்ட்டான அப்பாக்களாக இருக்க முயற்சிப்பார்கள். எனவே, அவர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வளவு நேசித்தாலும், அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாதவர்களாகவும், எப்போதும் கண்டிப்புடன் இருப்பவர்களாகவும் இருப்பார்கள். பெரும்பாலும் அவர்களின் குழந்தைகள் ஒவ்வொரு தவறுக்கும் அவர்களிடம் பெரிய தண்டனைகளை அனுபவிப்பதற்கு பயந்தே, அவர்களுடன் உரையாடாமல் விலகி இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் ஆர்வமாக இருப்பதுதான் முக்கியம். ஒரு அப்பாவாக அவர்கள் தங்கள் குழந்தைகள் ஏதாவது ஒரு விஷயத்தில்சாதிக்க வேண்டும் என்றும், வாழ்க்கையில் சிறந்ததை அடைய வேண்டும் என்ற ஆர்வமும் உற்சாகமும் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் தங்கள் குழந்தைகளை எதிர்காலத்திற்கு தயார்படுத்த முயற்சிப்பதில், அவர்கள் தங்கள் குழந்தையின் உணர்ச்சித் தேவைகள் மற்றும் ஆசைகளைப் பற்றி சற்று புரிந்து கொள்ள இயலாதவர்களாக இருப்பார்கள்.
மகரம்
மகர ராசி அப்பாக்கள் வாழ்க்கையில் பகுத்தறிவு மற்றும் நீதி உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் கூட தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள், மேலும் அவர்கள் எப்போதும் ஒழுக்கத்தாலும், ஞானத்தாலும் பதுக்கப்படுகிறார்கள். இருப்பினும், அவர்கள் பெரும்பாலும் பெற்றோருக்குரிய அணுகுமுறையில் மிகவும் கண்டிப்பானவர்களாக இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

