Latest Updates
-
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...!
இந்த 4 ராசிக்காரர்கள் எந்த இடத்துக்குமே சரியான நேரத்துக்கு வரமாட்டார்களாம்... பிறவி சோம்பேறிகளாம் இவங்க...!
நேரம் தவறாமை என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒரு அவசியமான குணமாகும். துரதிர்ஷ்டவசமாக இந்த குணம் பெரும்பாலான நபர்களிடம் இருப்பதில்லை. சிலர் அனைத்து விஷயங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் ஏன் வேலைக்கேக் கூட தாமதமாக செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுடன் இருப்பவர்களுக்கும் பெரும்பாலும் சிக்கல்களையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.
ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் பிறந்தவர்களிடம் இந்த மோசமான குணம் இருக்கும். அவர்களின் அலட்சியம் மற்றும் கவலையற்ற தன்மை முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்போதும், எந்த விஷயத்திற்கும் சரியான நேரத்திற்கு வர மாட்டார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

தனுசு
குருபகவானால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள், சாகசத்திற்கும் தன்னிச்சையான மனப்பான்மைக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் எப்போதும் புதிய எல்லைகளை ஆராய்வதையும், உற்சாகமான அனுபவங்களைத் தேடுவதையும் விரும்புகிறார்கள், இது பெரும்பாலும் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க வழிவகுக்கிறது.
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரமான மனநிலை கொண்டவர்கள் மற்றும் நிகழ்காலத்தில் வாழ விரும்புகிறார்கள், இதனால் அவர்களால் கடுமையான நேர அட்டவணைகளைப் பின்பற்ற முடியாது. அவர்களின் இயல்பான அலட்சியம், உண்மையில் இருப்பதை விட அதிக நேரம் இருப்பதாக அவர்களை நம்ப வைக்கிறது, இதன் விளைவாக பெரும்பாலும் தாமதம் ஏற்படுகிறது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் எண்ணங்களிலும், கற்பனை உலகிலும் மூழ்கிப் போகிறார்கள். அவர்கள் நேரத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, மாறாக அவர்களின் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீன ராசிக்காரர்கள் பச்சாதாபம் கொண்டவர்களாகவும், உணர்திறன் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள், இதனால் அவர்கள் தங்கள் சொந்த வேலைகளை மறந்துவிடலாம்.
நேரத்தை கடுமையாக கடைபிடிப்பதற்குப் பதிலாக அவர்களின் விருப்பத்தின் படி செல்லும் போக்கு அவர்களின் நிரந்தர தாமதத்திற்கு காரணமாக இருக்கிறது. மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் தாமதமாக வருவதற்கு காரணம், அவர்கள் தங்கள் சொந்த உலகில் வாழ்கிறார்கள், அங்கு நேரத்திற்கு முக்கியத்துவம் என்பதே இல்லை.
கடகம்
சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள் அனைவரின் மீதும் அன்பு செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இது நல்ல குணமாக இருந்தாலும் சில சமயங்களில் அவர்களை முடிவெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளுகிறது. கடக ராசிக்காரர்கள் பெரும்பாலும் விரைவாக முடிவுகளை எடுப்பதில் சிரமப்படுகிறார்கள், அது எவ்வளவு எளிதான விஷயமாக இருந்தாலும் சரி, எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும் சரி அவர்கள் எந்த முடிவையும் விரைவில் எடுக்க மாட்டார்கள். இந்த முடிவெடுக்க இயலாத குணம் அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் தாமதங்களை ஏற்படுத்தும்.
அவர்கள் சுவாரஸ்யமான மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுவதை ரசிக்கிறார்கள், இது அவர்களை நேரத்தை இழக்கச் செய்யலாம். அனைவரையும் மகிழ்விக்கவும் மோதலைத் தவிர்க்கவும் அவர்கள் விரும்புவது அதிகப்படியான அர்ப்பணிப்பு மற்றும் நிகழ்வுகளுக்கு தாமதமாக செல்வதற்கு வழிவகுக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் அவர்களின் வழக்கத்திற்கு மாறான மற்றும் சுதந்திர உணர்வுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் படி செயல்படுகிறார்கள், மேலும் நேரத்தை கடைபிடிப்பது உள்ளிட்ட சமூக விதிமுறைகளை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். கும்ப ராசிக்காரர்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள், அவர்கள் தங்கள் புதுமையான யோசனைகள் மற்றும் திட்டங்களில் மூழ்கிவிடுகிறார்கள், இதனால் அவர்கள் நேரத்தை மறந்துவிட வாய்ப்புகள் அதிகமாகிறது.
அவர்களின் புரட்சிகரமான போக்கு, அவர்கள் எப்போதும் சரியான நேரத்தில் இருப்பதன் முக்கியத்துவத்தை மதிப்பதில்லை, இது அவர்களை கட்டுப்படுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்கள். அது அவர்களை நேரத்திற்கு செல்ல அனுமதிப்பதில்லை.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












