Latest Updates
-
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
இந்த 5 ராசிக்காரர்களின் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாம்..இவங்க திருமண வாழ்க்கை அமோகமா இருக்குமாம்!
ஜோதிட சாஸ்திரம் ஒருவரின் பிறந்த ராசியின் அடிப்படையில் அவர்களின் ஆளுமை மற்றும் அவர் எப்படிப்பட்டவர், அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் போன்றவற்றை தெரிந்து கொள்ள உதவுகிறது. ஒருவரின் எதிர்காலம் என்று வரும்போது அவர்களின் திருமண வாழ்க்கை அதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உறவுகளைப் பொறுத்தவரை, சில ராசி தம்பதிகளுக்கு ஒரு தெய்வீகத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் ஒன்றாக இருப்பதற்காகவே படைக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
ஒரு தம்பதியிடையே இருக்கும் தனிப்பட்ட இணக்கத்தன்மை என்பது அவர்களின் தனிப்பட்ட ஆசைகள், வளர்ப்பு முறை மற்றும் அனுபவங்கள் உட்பட பல காரணிகளால் நிர்ணயிக்கப்பட்டாலும் ஜோதிடம் அவர்களின் திருமண வாழ்க்கை மற்றும் புரிதல் போன்றவற்றைக் கணிக்கக்கூடும். இந்த பதிவில் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாகத் தோன்றும், மேலும் நல்லிணக்கம் நிறைந்த திருமண வாழ்க்கையை அனுபவிக்கும் ஜோடி ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் மற்றும் தனுசு
நெருப்பு ராசிகளான மேஷம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் காந்தங்களைப் போல ஒஒட்டிக்கொள்ளும் ஒரே மாதிரியான ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் இருவருமே சுதந்திரமானவர்கள், உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், தன்னிச்சையாக செயல்பட விரும்புகிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் காதலும், தீராத ஆற்றலும் இந்த ஜோடியை ஒவ்வொரு வகையிலும் ஒரு துடிப்பான ஜோடியாக மாற்றுகிறது. வாழ்க்கை, பயணம் மற்றும் ஆய்வு மீதான அவர்களுக்கிடையே இருக்கும் பொதுவான ஆர்வம் உறவை உற்சாகமாக வைத்திருக்கிறது, அதே நேரத்தில் சுதந்திரத்திற்கான அவர்களின் பரஸ்பர மரியாதை அவர்கள் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதை உறுதி செய்கிறது.
ரிஷபம் மற்றும் கடகம்
பூமி ராசியான ரிஷபமும், நீர் ராசியான கடகமும் அன்புக்கும், விசுவாசத்திற்கும் பெயர் பெற்றவர்கள். ரிஷப ராசிக்காரர்கள், கடகம் ராசிக்காரர்கள் விரும்பும் ஸ்திரத்தன்மையையும், அன்பான உறவையும் வழங்குகிறார்கள். அதற்குப் பதிலாக கடக ராசிக்காரர்கள் உணர்ச்சிப்பூர்வமான ஆழத்தையும் அசைக்க முடியாத ஆதரவையும் வழங்குகிறார்கள். இந்த ஜோடி வீடு மற்றும் குடும்பத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துகொண்டு, இருவரும் நேசிக்கப்படுவதாகவும் பாதுகாப்பாகவும் உணரும் ஒரு அன்பான சூழலை உருவாக்குகிறார்கள். ஒரு பாதுகாப்பான, அன்பான குடும்பத்தை உருவாக்குவதில் அவர்கள் இருவருக்கும் உள்ள பொதுவான அர்ப்பணிப்பு, ஒரு இணக்கமான மற்றும் நீடித்த உறவிற்கு வழிவகுக்கிறது.
மிதுனம் மற்றும் துலாம்
காற்று ராசிகளான மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் அறிவுசார் ஆளுமை கொண்டவர்கள், அவர்கள் ஒற்றுமையான மற்றும் மகிழ்ச்சியான திருமண பந்தத்தை உருவாக்குகிறார்கள். அவர்களுக்கிடையே இருக்கும் இணக்கம் ஒப்பிடமுடியாதது, ஏனெனில் அவர்கள் முடிவில்லா விவாதங்கள் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் புரிதலை உருவாக்குகிறார்கள். மிதுன ராசிக்காரர்களின் தகவமைப்புத் திறனும், சமநிலையும், நல்லிணக்கத்திற்கான துலாம் ராசியினரின் விருப்பத்தை பூர்த்தி செய்கிறது, ஒரு தம்பதியாக, அவர்கள் அறிவுபூர்வமாகவும், உணர்ச்சிரீதியாகவும் நிறைவான ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்குகிறார்கள்.
சிம்மம் மற்றும் சிம்ம
ஒரே ராசியை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள், ஆனால் சிம்ம ராசிக்காரர்கள் அதற்கு விதிவிலக்கானவர்கள். இரண்டு சிம்ம ராசிக்காரர்கள் ஒன்றாகச் சேர்வது அளவுக்கதிகமான ஆற்றலின் இணைப்பாகத் தோன்றலாம், ஆனால் அவர்கள் இணையும் போது ஒரு அற்புதமான தம்பதியை உருவாக்குவார்கள். இந்த இருவரும் படைப்பாற்றல் மற்றும் கவன ஈர்ப்பு ஆகியவற்றின் மீது ஒருமித்த அன்பைக் கொண்டுள்ளனர். ஒருவருக்கொருவர் கவனத்திற்கும் பாராட்டிற்கும் உள்ள தேவையை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், இது பொறாமை மற்றும் பாதுகாப்பின்மை உறவில் நுழைவதைத் தடுக்கிறது. மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் மிகப்பெரிய ரசிகர்களாக மாறி, தங்களின் தனிப்பட்ட மற்றும் ஒன்றாக செய்யும் சாதனைகளைக் கொண்டாடுகிறார்கள்.
கன்னி மற்றும் மகரம்
பூமி ராசிகளான கன்னி மற்றும் மகரம், எதார்த்தம், பொறுப்புணர்வு மற்றும் லட்சியத்தின் உருவங்களாகத் திகழ்கிறார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் தங்கள் இலக்குகளில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள் மற்றும் கடினமாக உழைக்கும் மனப்பான்மை கொண்டவர்கள், இது அவர்களை தொழில் உலகில் ஒரு சக்திவாய்ந்த ஜோடியாக மாற்றுகிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் வெற்றி மீதான அர்ப்பணிப்பைப் பாராட்டுகிறார்கள், மேலும் தங்கள் பொதுவான கனவுகளை அடைய கடினமாக உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் வரும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு நிலையான, ஒழுங்கான மற்றும் திறமையான தம்பதிகளாக வாழ்வார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
