Latest Updates
-
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள்
விரல்களை பற்றிய இந்த விவரங்கள் உங்களுக்கு தெரியுமா?
சாதாரணமாக விரல்களை ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல் என்று சொல்கிறோம். இவற்றுக்கு ஜோதிடத்தில் வேறு பெயர்கள் உண்டு. அவை முறையே குரு விரல், சனி விரல், சூரிய விரல், புதன் விரல் ஆகும். உள்ளங்கையில் முறையே குரு மேடு, சனி மேடு, சூரிய மேடு, புதன் மேடு ஆகியவற்றிலிருந்து தொடங்கும் விரல்கள் இவை.
குரு விரல் :
கட்டை விரலுக்கு அடுத்து உள்ள விரலை குரு விரல் என்பார்கள். குரு மேட்டில் இருந்து எழும்புவதால் இதற்கு குரு விரல் அல்லது பிரகஸ்பதி விரல் என்று பெயர். இதனை சமஸ்கிருதத்தில் 'தர்ஜனி' என்று குறிப்பிடுகிறார்கள். ஒருவனது ஞானம், கல்வி, திறமை ஆகியவற்றை இந்த விரல் அமைப்பு குறிப்பிடுகிறது.
சனி விரல் :
பெருவிரல் அல்லது நடுவிரல் என்று குறிப்பிடப்படும் விரலை சனி விரல் என்பர். சனி மேட்டில் உற்பத்தியாவதால், சனி விரல் எனப்படுகிறது. இதனை வடமொழியில் 'மத்தியமா' என்கிறோம். ஒருவனது வெற்றி, செல்வம், செல்வாக்கு முதலியவற்றை இந்த விரலின் அமைப்பு விளக்குகிறது.

சூரிய விரல் :
சூரிய மேட்டில் உற்பத்தியாகும் இந்த விரல் சூரிய விரல். இது மோதிர விரல் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதை பவித்திர விரல் என்றும் குறிப்பிடுவார்கள். அதனால்தான், பூஜை, புனஸ்காரங்கள் செய்யும் பொழுது, தர்ப்பையால் ஆன பவித்திரத்தை இந்த விரலில் அணிகிறோம். இதற்கு வடமொழியில் 'அனாமிகா' என்று பெயர். ஒரு மனிதனின் புகழ், பெருமை, இந்த விரலின் அமைப்பால் தெரியும்.
புதன் விரல் :
வீட்டில் கடைசி பிள்ளையை கனிஷ்ட குமாரன் என்பார்கள். அதே போலத் தான் சுண்டு விரலுக்கு கனிஷ்டிகா என்று ஒரு பெயர் உண்டு. இது புதன் மேட்டில் உற்பத்தி ஆவதால் இதற்கு புதன் விரல் என்று பெயர். இதனைக் கொண்டு அல்லது இதன் அமைப்பைக் கொண்டு ஒருவரது திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை அறியலாம்.
விரல்களின் மொத்த தோற்றத்தை வைத்து, அவற்றைக் கூர்மையான விரல்கள் என்றும், தட்டையான விரல்கள் என்றும் பிரிக்கலாம்.
1. விரலின் அடிப்பாகத்தில் இருந்து மேல்பாகம் கூர்மையாக அமைந்தால், அவர்கள் உயர்ந்த எண்ணங்கள், உயர்ந்த செயல்கள், கலைத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். இந்த அன்பர்களிடம் மனிதநேயம் மிகுந்திருக்கும். தத்துவ மேதைகள், ஆன்மிக ஞானிகள், கலைஞர்கள் ஆகியோரின் விரல்கள், இந்த அமைப்பைப் பெற்றிருக்கும்.
2. விரல் நுனிகள் தட்டையாக இருந்தால், அவர்கள் திறமையாக வேலை செய்பவர்களாகவும், கடுமையான உழைப்பாளிகளாகவும், பிறரோடு சேர்ந்து வேலை செய்வதில், திறமை மிக்கவர்களாகவும், எடுத்த காரியத்தை திறம்பட முடிப்பவர்களாகவும் இருப்பார்கள். தொழில் அதிபர்கள், அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்கள், விளையாட்டு வீரர்கள், திறமைமிக்க தொழிலாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களின் விரல்கள், இந்த அமைப்பைக் கொண்டிருக்கும்.
3. ஒரு சில விரல்கள் முதல் வகை அமைப்பிலும், மற்ற விரல்கள் இரண்டாவது வடிவமைப்பிலும் இருந்தால், அவர்கள் மேலே குறிப்பிட்ட இரண்டு குணங்களும் கலந்தவர்களாக இருப்பார்கள்.
4. ஒட்டுமொத்தமாக விரல்களின் அமைப்பைக் கொண்டும் கூட ஒருவரின் குண நலனை அறிய இயலும். இதன் படி, விரல்கள் உள்ளங்கைகளை நோக்கி வளைந்திருக்குமானால் அவர்களுக்கு உலகப் பற்றுடன், தன்னைப் பற்றிய சிந்தனையும், சுய நலமும் மிகுதியாக இருக்கும். அவர்கள் தமது காரியங்களில் சிரத்தையாகவும் கவனமாகவும், ஈடுபாட்டுடனும் செயல்படுவார்கள். அதுவே, விரல்கள் புறங்கைப் பக்கமாக வளைந்திருந்தால், அவர்கள் பிறர் நலம் கருதுபவர்களாகவும், தாராள மனப்பான்மை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
5. விரல்களும் அவற்றுக்கு இடையே உள்ள இடை வெளியும் கூட சில பண்புகளை, குணநலன்களை கைரேகை சாஸ்திரப்படி உணர்த்துகிறது.
குரு விரலுக்கும், சனி விரலுக்கும் மத்தியில் அதிகமாக இடைவெளி இருக்குமானால் அவர்கள் சுயமாக சிந்தித்து செயல்படுபவர்கள். மனதில் பட்டதைப் பளிச்சென்று சொல்பவர்கள்.
6. சனி விரலுக்கும் சூரிய விரலுக்கும் அதிக இடைவெளி இருந்தால் அவர்கள் பொருளையும், வசதியையும் மட்டும் விரும்புபவர்கள், புகழுக்காக பொருளைத் தியாகம் செய்யாதவர்கள்.
7. சூரிய விரலுக்கும், புதன் விரலுக்கும் மத்தியில் இடைவெளி அதிகமாக இருந்தால், அவர்கள் குற்றம் செய்வதிலும், பிறருக்கு தீங்கு இழைப்பதிலும் விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
8. கட்டை விரலுக்கும், குரு விரலுக்கும் இடையே இடைவெளி அதிகமாக இருந்தால், அவர்கள் அன்பு, பண்பு, மனித நேயம் உடையவர்களாக இருப்பார்கள்.
உங்கள் கட்டை விரல் உங்களைப் பற்றி என்ன பேசுகிறது?
நீளமான கட்டை விரல் கொண்டவர்கள் : அதிக தன்னம்பிக்கையும், அதிக சாமர்த்தியமும் கொண்டவர்கள். பிறர் மீது அதிகாரம் செலுத்தும் வல்லமை கொண்டவர்கள். உணர்ச்சிகளை அல்லது உணர்வுகளை கட்டுப்படுத்த தெரிந்தவர்கள். அறிவாற்றலுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள். துணிவு கொண்டவர்கள். அறிவியல், விஞ்ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் பல அறிவியல் மேதைகளுக்கு நீளமான கட்டை விரல் காணப்படுவதாக ஒரு ஆய்வு சொல்கிறது.
கடினமான கட்டை விரல் கொண்டவர்கள் : கட்டை விரல் நேராகவும், தசைப்பகுதி கடினமாகவும், தடித்தும் இருந்தால் அவர்கள் கடினமான கட்டை விரலைக் கொண்டவர்கள் என்று சொல்லலாம். இப்படிப் பட்டவர்கள் அதிக பிடிவாத குணத்தை கொண்டவர்கள். தான் எண்ணியதே 'சரி' என்று நினைப்பவர்கள். பிறர் அறிவுக்கோ அல்லது உணர்வுக்கோ அதிக முக்கியத்துவம் தராதவர்கள். தங்கள் திறமையின் மீது மட்டுமே அதிக நம்பிக்கை கொண்டவர்கள்.
மிருதுவான வளைந்து கொடுக்கக் கூடிய கட்டை விரலைக் கொண்டவர்கள் : சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு வாழத்தெரிந்தவர்கள். பொருள்கள் மற்றும் செல்வத்தின் மீது அதிக பற்று கொண்டவர்கள். தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் இயல்பு கொண்டவர்கள்.
குட்டையான கட்டை விரல் கொண்டவர்கள் : கட்டை விரல் குட்டையாக காணப்படும் நபர்களால் சுயமாக சிந்தித்து செயலாற்ற முடியாமல் போகலாம். எப்போதுமே பிறர் அவிப்பிராயப்படியே நடப்பார்கள். அறிவாற்றலை விட உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள். சங்கீதம், கலை, கவிதை போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும்.
பின்குறிப்பு : பொதுவாகவே கட்டை விரல் என்று எடுத்துக் கொண்டால் அதில் மேல்பாகம், கீழ் பாகம் என்ற இரண்டு பகுதிகள் உண்டு. கட்டை விரலை மடக்கிப் பார்த்தால், மேல் பகுதியின் நீளத்தையும், கீழ் பகுதியில் நீளத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இதனைக் கொண்டு கட்டை விரலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை முறையே மேல் பகுதி நீளமாக உள்ள கட்டை விரலைக் கொண்டவர்கள். கீழ்ப்பகுதி நீளமாக உள்ள கட்டை விரலைக் கொண்டவர்கள்
மேல் பகுதி நீளமாக உள்ள கட்டை விரலைக் கொண்டவர்கள் : நல்ல தீவிரமான சிந்தனையாளர்கள். செயலாற்றும் துணிவு இவர்களிடம் அதிகம் காணப்படும். அதிக வைராக்கியம் கொண்டவர்கள். நியாய உணர்வுடன் நடந்து கொள்பவர்கள்.
கீழ்ப்பகுதி நீளமாக உள்ள கட்டை விரலைக் கொண்டவர்கள் : வேகமாகவும், துரிதமாகவும் இவர்கள் செயல்படக் கூடியவர்கள். அதனால் அவ்வப்போது தவறான முடிவுகளையும் கூட இவர்கள் எடுப்பது உண்டு.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











