Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
இந்த 4 ராசி பெண்கள் பணத்தை கணக்கில்லாம செலவு செய்வார்களாம்... இவங்களுக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் பத்தாது...!
இன்றைய உலகில் மக்கள் வாழ்வதற்கு காற்றை விட முக்கியப் பொருளாக பணம் மாறிவிட்டது. பணம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களின் அளவு கற்பனை செய்ய முடியாதது. பணம் மட்டுமே மகிழ்ச்சி அல்ல என்று பெரும்பாலான மக்கள் தத்துவம் பேசினாலும் உண்மையில் பணம் தரும் தைரியத்தை யாராலும் தர முடியாது.
நாம் அனைவருமே பொருட்களைச் செலவழிக்கவும் வாங்கவும் விரும்பினாலும், அதை ஒரு அளவிற்குள் வைத்திருக்க விரும்புகிறோம். பணத்தை மிக எளிதாகவும், அளவில்லாமலும் செலவழிக்கும் பழக்கத்தைக் கொண்ட சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எந்தவித முன் யோசனையும் இன்றி பணத்தை தாராளமாக செலவழிப்பார்கள்.

இந்த பழக்கம் ஒருவரின் வாழ்க்கைமுறையால் வருவதாக இருந்தாலும் அவர்கள் பிறந்த ராசியும் அதற்கு முக்கியக் காரணாமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசி பெண்கள் கணக்கில்லாமல் செலவு செய்பவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் தங்கள் மனக்கிளர்ச்சி இயல்புக்கு பெயர் பெற்றவர்கள், மேலும் இந்த பண்பு பெரும்பாலும் அவர்களின் செலவழிக்கும் குணத்திலும் தொடர்கிறது. அவர்கள் எதைப்பற்றியும் யோசிக்காமல் விரைவாக முடிவுகளை எடுப்பார்கள், அவர்களுக்கு பிடித்த கேட்ஜெட்டுகள் மற்றும் துணி என எதுவாக இருந்தாலும் அவர்கள் அதை உடனடியாக வாங்குவார்கள். புதிய விஷயங்களை வாங்குவதில் உள்ள சுவாரஸ்யம் அவர்களுக்கு உந்து சக்தியாக உள்ளது. இதனால் அவர்கள் ராசியில் மிகவும் ஊதாரித்தனமாக செலவு செய்வதில் முதலிடத்தில் உள்ளனர்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகச்சிறந்த மற்றும் ஆடம்பர விஷயங்களை நேசிப்பதற்காக அறியப்படுகிறார்கள், இதனால் அவர்கள் செலவு செய்ய ஒருபோதும் தயங்குவதில்லை. அவர்கள் இயற்கையாகவே ஆடம்பரத்தின் மீது அதிக ஈர்ப்பைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் அதை செய்ய பயப்படுவதில்லை மற்றும் அதனை செய்வதால் குற்ற உணர்ச்சியும் கொள்வதில்லை.
உயர்தர ஃபேஷன் பிராண்டுகள் முதல் உயர்தர உணவகங்கள் மற்றும் ஆடம்பரமான விடுமுறைகள் வரை, வாழ்க்கையில் சிறந்த அனுபவங்களை பெற பணத்தை தண்ணீர் போல செலவழிக்க தாயங்குவதில்லை.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அழகு மற்றும் ஆடம்பரம் மீது இயல்பிலேயே அதிக ஆர்வம் கொண்டுள்ளனர், மேலும் இது அவர்களின் செலவுப் பழக்கத்திலும் நீள்கிறது. அவர்கள் கலை, வீட்டு அலங்காரம் மற்றும் ஃபேஷன் ஆகியவற்றில் தயக்கமின்றி முதலீடு செய்கிறார்கள்.
துலாம் ராசிக்காரர்கள் ஆடம்பர பொருட்கள் மற்றும் அழகிய பொருட்கள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது என்று நம்புகிறார்கள், இது அடிக்கடி கணக்கின்றி செலவு செய்ய வழிவகுக்கும். இவை அனைத்தும் தாராள மனப்பான்மை மற்றும் தாராள செலவு செய்யும் நபர்கள் என்ற பெயரை அவர்களுக்கு பெற்றுத்தருகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இயல்பிலேயே சாகசக்காரர்கள். அவர்கள் புதிய இடங்கள், கலாச்சாரங்கள் மற்றும் அனுபவங்களை ஆராய விரும்புகிறார்கள், இது பெரும்பாலும் பயணம் மற்றும் சாகசங்களுக்கு பணம் செலவழிப்பதற்கு வழிவகுக்கிறது. அவர்கள் ஒரு வழக்கமான வாழ்க்கையில் ஒற்போதம் திருப்தியடையவில்லை மற்றும் செலவைப் பொருட்படுத்தாமல் ஒரு புதிய சாகசத்தைத் தொடங்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.
தனுசு ராசிக்காரர்களுக்கு கற்றலில் தீராத ஆர்வமும் விருப்பமும் இருக்கும். அவர்களின் செலவு எப்போதும் பொருள் உடைமைகளை சார்ந்ததாக இருக்காது என்றாலும், அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பணத்தை ஆர்வத்துடன் செலவழிக்கும் ராசி அறிகுறிகளில் முக்கிய இடத்தில் உள்ளனர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












