Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
இந்த 3 ராசி பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் நிகழ்வாகும். ஒருவரின் வாழ்க்கையின் பிற்பகுதி எப்படி இருக்கப்போகிறது என்பதை நிர்ணயிப்பது அவர்களின் திருமண வாழ்க்கையும், அவர்களின் வாழ்க்கைத் துணையும்தான். சிலர் திருமண பந்தத்தில் மிகவும் நிதானமாக சிந்தித்து தேவையான நேரம் எடுத்து அதற்குப்பின் இணைவார்கள்.
விதிவிலக்காக சில ராசி பெண்கள் தங்கள் ஆளுமைப் பண்புகள் மற்றும் ஜோதிட தாக்கங்கள் காரணமாக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ள அதிக வாய்ப்புள்ள பெண் ராசிகள் என்னென்ன மற்றும் அதற்கான காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
சந்திரனால் ஆளப்படும் கடக ராசி பெண்கள், வீடு, குடும்பம் மற்றும் உணர்ச்சிப் பாதுகாப்புடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இயற்கையாகவே அக்கறை உணர்வு கொண்டவர்கள் மற்றும் பெரும்பாலும் சிறு வயதிலிருந்தே அன்பான, நிலையான குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். கடக ராசி பெண்கள் ஆழ்ந்த உணர்ச்சிப் பிணைப்புகளை விரும்புகிறார்கள் மற்றும் முழு மனதுடன் காதலிக்க விரும்புகிறார்கள், இது அவர்களை இளம் வயதிலேயே திருமண பந்தத்தில் இணைய வழிவகுக்கும்.
பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலுக்கான அவர்களின் விருப்பம் திருமணத்தை அதற்கான சிறந்த வழியாக மாற்றுகிறது. கடக ராசி பெண்கள் தங்கள் துணையுடன் வாழ்க்கையையும் குடும்பத்தையும் உருவாக்குவதை மகிழ்ச்சியாக நினைக்கிறார்கள்.
ரிஷபம்
அழகு மற்றும் காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி பெண்கள், மனஉறுதி, விசுவாசம் மற்றும் ஆறுதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் உறுதியான இயல்புக்கும் நீண்டகால உறவுகளுக்கான விருப்பத்திற்கும் பெயர் பெற்றவர்கள். ரிஷப ராசி பெண்கள் பெரும்பாலும் பாரம்பரியமானவர்கள் மற்றும் திருமணம் வழங்கும் பாதுகாப்பைப் பாராட்டுகிறார்கள்.
அவர்கள் பாதுகாப்பான வாழ்க்கை முறையை விரும்புவதால், இளம் வயதிலேயே நிலையான மற்றும் அன்பான உறவை நாட வாய்ப்புள்ளது. தங்கள் துணையுடன் ஒரு உறுதியான உறவை உருவாக்கி, திருமண வாழ்க்கையின் வசதிகளை மகிழ்ச்சியை அனுபவிக்கும் அவர்களின் விருப்பம் ரிஷப ராசிக்காரர்களை மிகவும் கவர்ந்திழுக்கிறது. உறவுகளை சிறப்பாகச் செயல்படுத்துவதில் அவர்களின் பொறுமையும் அர்ப்பணிப்பும் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளும் அவர்களின் விருப்பத்திற்கு காரணமாக இருக்கின்றன.
துலாம்
சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசி பெண்கள் உறவுகளில் செழித்து வளர்கிறார்கள், மேலும் தங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள யாராவது இருக்கும்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் இயற்கையாகவே காதல் உணர்வு அதிகம் கொண்டவர்கள், அவர்கள் காதல் மற்றும் நல்லிணக்கத்தை நம்புகிறார்கள். துலாம் ராசிக்காரர்கள் வாழ்வில் சமநிலையையும், தோழமையையும் நாடுகிறார்கள், இது பெரும்பாலும் அவர்களை விரைவில் திருமணம் செய்து கொள்ள வழிவகுக்கிறது.
துலாம் ராசிக்காரர்கள் திருமண வாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிக்க இளம் வயதிலேயே திருமணம் செய்ய விரும்புகிறார்கள். மேலும் தங்களுக்கு பிடித்த நபருடன் சேர்ந்து அழகான மற்றும் சமநிலையான வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பம் அவர்களை இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











