Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
இந்த 4 ராசி பெண்கள் லட்சுமி தேவிக்கு ரொம்ப பிடித்தமானவர்களாம்... கோடீஸ்வர யோகம் இவர்களுக்கு பிரகாசமா இருக்கு!
ஜோதிட சாஸ்திரத்தில் செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தின் தெய்வமாக லட்சுமி தேவி கருதப்படுகிறார். ஒருவருக்கு லட்சுமி தேவியின் அருள் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் சகல செல்வங்களும் தேடிவரும். அவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் பொருளாதரரீதியான பிரச்சினைகள் வராது.
லட்சுமி தேவியின் அருள் அனைவருக்கும் பொதுவானது என்றாலும் சில ராசிகளில் பிறந்த பெண்களுக்கு லட்சுமி தேவியின் அருள் அதிகமாக இருக்கும். இந்த ராசிகளில் பிறந்த பெண்களின் வாழ்க்கையில் எப்போதும் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும் மற்றும் அவர்கள் வாழ்க்கையில் கிடைக்கும் விஷயங்கள் பொக்கிஷமாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்த பெண்கள் லட்சுமி தேவியால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
இந்த ராசியில் பிறந்த பெண்கள் வெளிப்படையான குணம் மற்றும் பிடிவாதத்திற்கு பெயர் பெற்றவர்கள். இந்த பிடிவாத குணம் அவர்களை வாழ்க்கையில் பெரும் வெற்றிக்கு இட்டுச் செல்லலாம் அல்லது குறிப்பிடத்தக்க இழப்புகளை ஏற்படுத்தலாம்.
இந்த ராசி பெண்கள் தங்கள் கோபத்தையும் பிடிவாதத்தையும் நேர்மறையான விளைவுகளை நோக்கிச் செலுத்தக் கற்றுக்கொண்டால், லட்சுமி தேவியின் அருள் அவர்களின் வாழ்க்கையில் கூடுதல் ஆசீர்வாதமாக மாறும். இந்த ராசி பெண்கள் பெரும்பாலும் தங்கள் கணவருக்கும் தங்களின் ஆசீர்வாதத்தைப் பரப்பக் கூடியவர்கள்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படுவதால், இந்த ராசி பெண்கள் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், சூரியக் கடவுளின் அருளையும் பெறுகிறார்கள். சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் வாழ்நாள் முழுவதும் சுகபோகங்களை அனுபவிக்கிறார்கள் மற்றும் அவர்களின் உழைப்பின் மூலம் பெரும் சாதனைகளை செய்யக்கூடியவர்கள். அவர்களின் திருமண வாழ்க்கையும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்கள் ராணி போல வாழும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள்.
துலாம்
துலாம் ராசி பெண்கள் லட்சுமி தேவியின் அருளால் சிறப்பான வாழ்க்கை வாழக்கூடியவர்கள். அவர்கள் அன்பு மற்றும் செல்வத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள், இந்த ராசி பெண்கள் ஒருபோதும் பொருளாதாரரீதியான பிரச்சினையை அனுபவிப்பதில்லை. அவர்கள் தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டால், அவர்கள் விரும்பும் அனைத்தையும் அவர்கள் பெற வாய்ப்புள்ளது. சுக்கிரன் அவர்களின் ஜாதகத்தில் வலுவாக இருப்பதால் அவர்களின் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவும், அன்பு நிறைந்ததாகவும் இருக்கும்.
ரிஷபம்
ஜோதிடத்தின் படி ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் லட்சுமி தேவிக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள். மேலும் லட்சுமி தேவியின் ஆசியால் அவர்கள் விரும்பும் அனைத்தையும் குறைந்த முயற்சியிலேயே பெறக்கூடியவர்கள். அவர்கள் வாழ்க்கையில் வறுமை மிகவும் அரிதாகவே எட்டிப்பார்க்கும். இவர்களும் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் உதவிகள் அவர்களுக்கு எளிதில் கிடைக்கும். லட்சுமி தேவி அவர்களுக்கு எப்போதும் சிறப்பு சலுகைகளை வழங்குகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

