Latest Updates
-
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்..
2026-ல் இந்த 3 ராசிப் பெண்கள் அவங்க கணவருக்கு அதிர்ஷ்ட தேவதைகளா இருப்பார்களாம்!
Lucky Women Zodiac Signs In 2026: ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். அதோடு அந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தவர்களுக்கும் அதிர்ஷ்டத்தைத் தருகிறார்கள். அதனால் தான் சில ஆண்கள் திருமணத்திற்கு பின் தங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும் காண்கிறார்கள்.
இப்படி திருமணத்திற்கு பின் சில ஆண்கள் மிகப்பெரிய அளவில் உயரத்தை தொடுவதற்கு கடின உழைப்பு ஒரு காரணமாக இருந்தாலும், மறுபுறம் அவர்களின் வாழ்க்கைத் துணையும் ஒரு முக்கியமான காரணம்.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் சில ராசியைச் சேர்ந்த பெண்கள் அவர்களின் கணவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிப் பெண்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் மனைவியின் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசியின் அதிபதி மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன். பொதுவாக கடக ராசிக்காரர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பர். அதுவும் இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் 2026 ஆம் ஆண்டில் தங்கள் கணவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறார்கள். அதுவும் உணர்ச்சி ரீதியாக நல்ல ஆதரவை வழங்குவார்கள். தொழிலில் பெரிதும் உதவியாக இருப்பார்கள். வேலையில் சிறந்து விளங்க ஊக்குவிப்பார்கள். இதுவரை சவால்களை எதிர்கொண்டு மன அழுத்தத்தில் இருந்தால், அவர்களை சாந்தப்படுத்தி, அவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் 2026-ல் தங்கள் கணவரின் இலக்குகளை அடைய ஊக்கமளிப்பார்கள். அவருடைய அனைத்து வேலைகளையும் திறம்பட கையாளுவார்கள். மேலும் இவர்கள் தனது கணவர் வாழ்வில் முன்னேற திட்டங்களை வகுத்து, அவற்றை பின்பற்ற வைப்பார்கள். முக்கியமாக சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் தலைவரின் குணங்களைக் கொண்டிருப்பதால், தங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த ஆற்றலை அளிப்பார்கள். கடினமான காலங்களில் எவ்வாறு வலுவாக இருப்பது மற்றும் நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்துவது என்பது நன்கு தெரியும். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அவர்களின் கணவர் தொழில் ரீதியாக வளர துணைபுரியும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி நீதிமான் சனி பகவான். இந்த ராசிக்காரர்களின் அன்பு நேர்மையானது மற்றும் இவர்கள் தங்கள் துணையின் தேவைகளை நன்கு புரிந்து கொள்வார்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்கள். இவர்கள் தனது அன்பால் தனது கணவரை குணப்படுத்துவார்கள். யாருக்கும் எந்த தீங்கும் செய்யமாட்டார்கள். அதனால் தான் அவர்கள் வலுவான கர்மாவை உருவாக்குகிறார்கள் மற்றும் இது அவர்களுக்கு தேவைப்படும் போது ஆதரவளிக்கிறது. 2026 ஆம் ஆண்டில், இந்த பெண்கள் தங்கள் கணவர்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருப்பார்கள், மேலும் அவர்களின் வெற்றியில் பெரும் பங்களிப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











