Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
இந்த 5 ராசி பெண்கள் அவங்க கணவர்களை பணக்காரர்களாக்குவார்களாம்.. உங்க மனைவி ராசி இருக்கா-ன்னு பாருங்க..
Lucky Women Zodiac Signs: ஜோதிடத்தின் படி, ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களும் பெரும்பாலும் அந்நபரின் ராசியைப் பொறுத்தது. சொல்லப்போனால் ஒருவரது ராசியைக் கொண்டே அந்நபரைப் பற்றி பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக அந்நபரின் எதிர்காலம் எப்படி இருக்கும், குணாதிசயம் எப்படி இருக்கும் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.
அதுவும் ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையும் திருமணத்திற்கு பின் மாறும். இதற்கு திருமணம் செய்துள்ள பெண்ணின் ராசியும் ஒரு முக்கிய காரணமாக ஜோதிடம் கூறுகிறது. முக்கியமாக ஒரு ஆணுக்கு அமையும் துணையின் ராசி அந்த ஆணின் தொழில், வணிகம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஒருவரது விதியில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ, அப்படி தான் நடக்கும். ஜோதிடத்தின் படி, சில ராசி பெண்கள் அவர்களின் கணவர்களுக்கு அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் தங்கள் கணவனை பணக்காரர்களாக்கும் அளவில் அதிர்ஷ்டத்தைக் கொண்டவர்கள். இப்போது அந்த அதிர்ஷ்டமான ராசி பெண்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் மனைவியின் ராசியும் இதில் உள்ளதா என்று பாருங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு, ஈர்ப்பு ஆகியவற்றின் காரணியாவார். எனவே இந்த ரிஷப ராசியைச் சேர்ந்த பெண்கள் மிகவும் பொறுப்பானவர்களாகவும், பாசமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் நிதி விஷயங்களை கையாள்வதில் வல்லவர். இதனால் இத்தகைய பெண்கள் வீட்டை மகிழ்ச்சியாகவும், எவ்வித குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். இந்த ராசியைப் பெண்களை மனைவியாக கொண்டால், அந்த ஆணின் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி, செல்வம், வெற்றி போன்றவை எப்போதும் நிறைந்திருக்கும்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த கடக ராசியைச் சேர்ந்த பெண்கள் மிகவும் அக்கறையாக இருப்பார்கள். இந்த பெண்கள் தங்கள் துணையின் ஆசையை நிறைவேற்றுவதோடு, பிரச்சனையை தீர்க்க முயற்சிப்பார்கள். மேலும் இந்த ராசி பெண்கள் தங்களைச் சுற்றியிருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அதோடு இவர்கள் தங்கள் துணையை மிகவும் நேசிப்பார்கள். இந்த ராசிப் பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பர். முக்கியமாக இந்த பெண்களை வாழ்க்கையில் கொண்ட ஆண்கள் மகத்தான செல்வத்தைப் பெற்று, செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சிம்ம ராசியைச் சேர்ந்த பெண்கள் மிகவும் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையைக் கொண்டவர்கள். இவர்கள் அனைவருக்கும் உதவ விரும்புவார்கள். மேலும் எதையும் வெளிப்படையாக பேசுவதால் அனைவருக்கும் பிடித்தமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் புன்னகையுடன் இருப்பார்கள். நல்ல தலைமைத்துவ திறன்களைக் கொண்டிருப்பார்கள். முக்கியமாக இந்த ராசி பெண்கள் தனது கணவரின் கனவுகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்ற முயற்சிப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் சுதந்திரமானவர்கள், புத்திசாலிகள் மற்றும் நட்பானவர்கள். நல்ல தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். மற்வர்களுக்கு எப்போதும் உதவ தயாராக இருப்பார்கள். எப்போதும் தங்களை மற்றவரிடம் இருந்து வேறுபடுத்திக் கொள்ள விரும்புவதோடு, அவ்வாறு செய்து வெற்றியும் பெறுவார்கள். இவர்கள் தங்கள் கணவரை அதிகம் நேசிப்பார்கள். நிதி முடிவுகளை எடுப்பதில் வல்லவர் என்பதால் தனது கூட்டாளருக்கு நிதி விஷயங்களில் உதவியாக இருப்பார்கள்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குருபகவான். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் தனது துணையை அதிகமாக காதலிப்பார்கள். இந்த பெண்கள் தனது கனவை எப்படி நிறைவேற்றுவது என்பது நன்கு தெரியும். இந்த ராசி பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். காதலில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். தனது கணவரை எப்போதும் ஆதரிப்பார்கள். நிதி விஷயங்களில் வல்லவராக இருப்பார்க.ள தனித்துவமான யோசனைகளால் தனது கணவரை எப்போதும் ஆதரிப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications