Latest Updates
-
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்!
இந்த 4 ராசிக்காரங்க 40 வயதுக்கு பிறகுதான் ராஜா மாதிரி வாழ்வார்களாம்... அதுவரைக்கும் கஷ்டம்தான் படுவாங்களாம்...
வாழ்க்கையில் வெற்றி என்பது அனைவரும் விரும்புவதாகும், நம் சமூகத்தில் வெற்றி என்பது பெரும்பாலும் பணத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. வாழ்க்கையில் சிலருக்கு வெற்றி என்பது இளம் வயதிலேயே கிடைத்து விடுகிறது, சிலருக்கு வாழ்க்கையில் பிற்பகுதியில் கிடைக்கிறது.
நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், வெற்றி என்பது எப்போதுமே நீங்கள் எவ்வளவு வேகமாக அதை அடைகிறீர்கள் என்பதில் இல்லை, மாறாக நீங்கள் தொடங்கும் பயணம் மற்றும் அந்த பயணத்தில் நீங்கள் காட்டும் விடாமுயற்சி.

ஜோதிட சாஸ்திரத்தில் சில ராசிக்காரர்கள் அவர்களின் இளமைக்காலத்தில் பெரிய அளவில் சாதிக்கவில்லையென்றாலும், பிற்காலத்தில் பெரிய வெற்றியைப் பெறுவதற்கு அதிர்ஷ்டம் உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கமான மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர்கள். நீண்ட கால வெற்றி மீது அவர்கள் உறுதியான பார்வை கொண்டவர்கள், அவர்கள் பெரும்பாலும் ராசி சக்கரத்தின் கடுமையான உழைப்பாளிகளாக கருதப்படுகிறார்கள். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு எப்போதும் உடனடி பலனைத் தராது என்றாலும், மகர ராசிக்காரர்கள் நீண்டகால வெற்றியை அடையும் திறமையைக் கொண்டுள்ளனர்.
அவர்களின் லட்சியம் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது, மேலும் அவற்றை அடைய தேவையான நேரத்தையும் முயற்சியையும் செலவிட அவர்கள் பயப்படுவதில்லை. வெற்றி என்பது எப்போதுமே உடனடி மனநிறைவு அல்ல, மாறாக நிலையான முயற்சி மற்றும் பின்னடைவு ஆகியவற்றைப் பற்றியது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
மகர ராசிக்காரர்கள் இளம் வயதிலேயே சாதனைகளால் கவனத்தை ஈர்ப்பவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் பொறுமை, விடாமுயற்சி மற்றும் கணக்கிடப்பட்ட அணுகுமுறை பெரும்பாலும் வாழ்க்கையின் பிற்காலத்தில் பெரிய வெற்றிகளுக்கு வழிவகுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மன உறுதியும், விடாமுயற்சியும் கொண்டவர்கள். ரிஷப ராசிக்காரர்கள் உறுதியானவர்கள் மற்றும் விடாப்பிடியான அணுகுமுறைக் கொண்டவர்கள். வாழ்க்கையில் தங்களுக்கு என்ன வேண்டும் என்பது பற்றிய தெளிவான பார்வை அவர்களுக்கு உள்ளது, மேலும் அவர்கள் தங்கள் இலட்சியத்தை அடைய கடினமாக உழைக்க பயப்படுவதில்லை.
உடனடி வெற்றியைத் தேடும் மற்ற ராசிகளைப் போலல்லாமல், உண்மையான வெற்றிக்கு பெரும்பாலும் பொறுமை மற்றும் நிலைத்தன்மை தேவை என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ரிஷப ராசிக்காரர்கள் மெதுவாக முன்னேறுவது போல தோன்றலாம், ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக முன்னேறுவார்கள். அவர்கள் நீண்ட கால வெற்றியை குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள் மற்றும் எதிர்கால வெற்றிக்கான அடித்தளத்தை உன்னிப்பாக அமைக்கிறார்கள்.
ரிஷப ராசிக்காரர்கள் அவர்களின் இணையற்ற சகிப்புத்தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். பின்னடைவுகளை சந்திக்கும் போது, அவர்கள் தளர மாட்டார்கள், மாறாக அதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்கிறார்கள். இந்த விடாமுயற்சி பெரும்பாலும் பிற்கால வாழ்க்கையில் பெரும் வெற்றியை அடைய அவர்களை வழிநடத்துகிறது.
கன்னி
பகுப்பாய்வு மற்றும் நுணுக்கமான இயல்புக்கு பெயர் பெற்ற கன்னி ராசிக்காரர்கள் ராசி சக்கரத்தின் பர்பெக்ட்டானவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தவொரு விஷயத்தையம் சரியான வழியில் செய்வதில் நம்புகிறார்கள் மாறாக எளிதான வழியில் செய்ய விரும்புவதில்லை. இது பெரும்பாலும் அவர்கள் அடைய விரும்பும் இடத்தை அடைய அதிக நேரம் எடுக்கும், ஏனெனில் அவர்கள் எதிர்பார்ப்புக்கு குறைவான எதையும் அவர்கள் வெற்றியாக கருதுவதில்லை, ஆனால் அவர்கள் நினைத்ததை அடையும் போது , அவர்களின் சாதனைகள் மற்றவர்களை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும்.
மற்றவர்கள் விரைவாக முன்னேறினாலும், கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்கள் கவனிக்காத வழிகளில் முன்னேறுவதில் கவனமாக இருக்கிறார்கள். இந்த கவனமான அணுகுமுறை அவர்களை தாமதமாக வெற்றியடைபவர்களாக மாற்றலாம், ஆனால் இது அவர்களின் வெற்றி உறுதியானது மற்றும் நிலையானது என்பதை உறுதி செய்கிறது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் படைப்பாற்றல், உள்ளுணர்வு மற்றும் பச்சாதாபம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த குணங்கள் பெரும்பாலும் வாழ்க்கையில் வழக்கத்திற்கு மாறான பாதைகளில் அவர்களை வழிநடத்துகின்றன. மற்றவர்கள் வேலையில் அல்லது வியாபாரத்தில் வெற்றிக்கான பாரம்பரிய வரையறைகளைத் துரத்துவதில் மும்முரமாக இருக்கும்போது, அவர்கள் கலை, ஆன்மீகம் மற்றும் சமூக சேவைகளில் கவனம் செலுத்துகிறார்கள்.
இதனால் மீன ராசிக்காரர்கள் வழக்கமான வெற்றியை பெற முடியாது என்று அர்த்தப்படுத்துவதில்லை, அவர்களின் பயணம் சற்று தாமதம் ஆகலாம் அல்லது சற்று வித்தியாசமாக இருக்கும் என்று அர்த்தம். அவர்களின் வெற்றியானது வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒரு நிலையான வாழ்க்கையுடன் தங்கள் ஆர்வங்களை ஒன்றிணைக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
