Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
இந்த 4 ராசிக்காரர்களுக்கு அனைத்தையும் விட பணம்தான் முக்கியமாம்... அதனாலேயே பணம் அவர்களை தேடிவருமாம்...!
மனிதராக பிறந்த அனைவருக்குமே வாழ்வதற்கு பணம் அவசியம் தேவை. ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை பெரும்பாலான நபர்கள் புரிந்து கொள்வதில்லை. சிலருக்கு பணம் சம்பாதிப்பதற்கான இயல்பான திறமை எப்படி வலுவாக இருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒருவேளை அது அவர்களின் பிறந்த ராசியின் மூலம் கிடைத்திருக்கலாம்.
ஜோதிடம் நம் ஆளுமையைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் பற்றி நிறைய சொல்ல முடியும், பணத்தை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பது உட்பட. சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களையும் விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால்தான் அவர்கள் எப்போதும் பணத்தை குவிக்கிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அனைத்தையும் விட பணம் முக்கியம் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் நம்பகமானவர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் அறியப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை மட்டுமே அடைய விரும்புகிறார்கள், மேலும் அவற்றைப் பெறுவதற்கு பணம்தான் முக்கியம் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். ரிஷப ராசிக்காரர்கள் விடாமுயற்சியுடன் இருப்பார்கள், மேலும் அவர்கள் தங்கள் நிதி இலக்குகளை அடையும் வரை ஓயமாட்டார்கள்.
பணத்தைச் சேமிப்பதிலும், புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்வதிலும் அவர்கள் சிறந்தவர்கள். நிதிரீதியாக தன்னிறைவு அடைந்த பின்னரே அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்கள் லட்சியத்திற்கும், ஒழுக்கமான செயல்முறைக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் இயற்கையாகவே தலைமைத்துவ குணம் கொண்டவர்கள் மற்றும் பெரும்பாலும் அவர்கள் நுழையும் துறையில் எப்போதும் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள்.
மகர ராசிக்காரர்கள் வெற்றியின் ஏணியில் ஏறுவதை உறுதிசெய்ய தங்கள் வாழ்க்கையை கவனமாக திட்டமிடுகிறார்கள். அவர்களுக்கு பலனளிக்காத எந்த விஷயத்திலும் அவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள், அது அவர்களின் காதல் உறவாக இருந்தாலும் கூட.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எதார்த்தமானவர்களாகவும், சின் சின்ன விஷயங்களுக்குக் கூட முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் பட்ஜெட் தயாரிப்பதில் சிறந்தவர்கள், மேலும் தரத்தில் சமரசம் இல்லாமல் பணத்தை மிச்சப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் நிதி விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பார்கள், மேலும் தேவையில்லாத விஷயங்களுக்கு பணத்தை செலவழிக்க மாட்டார்கள். அவர்களின் துணையே ஒரு பொருளை ஆசையாக கேட்டாலும் அது தேவையானதா? இல்லையா? என்பதை ஆராயாமல் வாங்கித்தர மாட்டார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஆர்வமுள்ளவர்களாகவும், சமயோசிதமாக சிந்திப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் கவனிக்காமல் விடக்கூடிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவதில் அவர்களுக்கு மிகுந்த அதீத திறமை இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் சிறந்த தந்திரவாதிகள் மற்றும் தங்கள் பணத்தை எவ்வாறு தங்களுக்கு வேலை செய்ய வைப்பது என்ற வித்தையை நன்கு அறிந்தவர்கள். அவர்களுக்கு லாபம் தராத எந்த உறவிலும் அவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
