Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
இந்த 4 ராசிக்காரர்களுக்கு காதலை விட நண்பர்கள்தான் முக்கியமாம்... இவங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம்...!
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் வித்தியாசமான ஆளுமைக் கொண்டவர்கள். காதலும், நட்பும் ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான உறவுகளாகும், ஆனால் இரண்டில் எது முக்கியமானது என்றால் யாராலும் கூற முடியாது. சில ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களிடம் வைத்திருக்கும் வலுவான விசுவாசத்திற்காக தனித்து நிற்கிறார்கள்.
உண்மையில் அவர்களுக்கு காதலை விட நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதன் பொருள் அவர்கள் தங்கள் காதல் துணையை மதிக்க மாட்டார்கள் என்று அர்த்தமல்ல, மாறாக அவர்களின் நட்பு அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு, நண்பர்களுடன் நெருங்கிய உறவைப் பேணுவது அவர்களின் உணர்ச்சி நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சிக்கு அவசியம். இந்த பதிவில் காதலியை விட நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பன்முகத்தன்மை மற்றும் சமூகமயமாக்கலில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களுக்கு மிகப்பெரிய நண்பர்கள் கூட்டம் உள்ளது, மேலும் தங்கள் நண்பர்க்ளுடன் நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களின் வாழ்க்கைத்துணைக்கு நேரம் ஒதுக்குவது அவர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கலாம்.
மிதுன ராசிக்காரர்கள் தங்கள் நட்பு அவர்களை இளமையாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கும் என்று நம்புகிறார்கள். அவர்கள் பலவீனமாகவோ அல்லது நம்பகத்தன்மையற்றவர்களாகவோ இருக்க முயற்சிக்கவில்லை, ஆனால் நண்பர்கள் மூலம் கிடைக்கும் புதிய அனுபவங்கள் மற்றும் சமூக தொடர்புகளின் உற்சாகத்தை அவர்களால் தவிர்க்க முடியாது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே உலகை ஆராயும் குணமுடையவர்கள், அவர்கள் இணக்கமான உறவுகளில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நட்புக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் கிடைக்கும் சமூக உணர்வு மற்றும் மகிழ்ச்சியை அவர்கள் மதிக்கிறார்கள். இதனால் துலாம் ராசிக்காரர்களின் துணை சில சமயங்களில் புறக்கணிக்கப்பட்டதாக உணரலாம்.
இருப்பினும், துலாம் ராசிக்காரர்கள் தங்கள் நட்பை வளர்ப்பது அவர்களின் வாழ்க்கையில் சமநிலையையும், மகிழ்ச்சியையும் தருகிறது என்று நம்புகிறார்கள். உண்மையில் அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை தங்கள் துணைக்கும் கொடுக்கிறார்கள், ஆனால் அது அவர்களின் துணைக்கு புரியாது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சமூகத்தின் மீதான அன்பிற்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தனியாக இருப்பதை விட குழுவாக இருக்கும் போது சிறப்பாக செயல்படுவார்கள் மற்றும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், அதனால்தான் எல்லாவற்றிற்கும் மேலாக தங்கள் நட்பை முதன்மைப்படுத்துகிறார்கள்.
அவர்களின் வாழ்க்கைத்துணை சில சமயங்களில் அவர்களின் வாழ்க்கையில் இரண்டாவது இடத்தில் இருப்பது போல உணர்த்தலாம். இருப்பினும், தங்கள் நட்பை வளர்ப்பது தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாகசத்தை விரும்புபவர்கள், அவர்கள் தங்கள் நண்பர்களுடன் புதிய எல்லைகளை ஆராய்வதை விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் நட்புக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் நண்பர்கள் மூலம் கிடைக்கும் சுதந்திர உணர்வு மற்றும் ஆர்வத்தை மதிக்கிறார்கள். அவர்களின் துணை சில சமயங்களில் அவர்களின் சாகச உணர்வு மற்றும் நண்பர்களுடன் ஒப்பிடும் போது இரண்டாம் பட்சமாக இருப்பது போல் உணரலாம்.
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் நட்பு தங்களை இளமையாகவும், உத்வேகமாகவும் வைத்திருக்கும் என்று நம்புகிறார்கள். அவர்கள் பொறுப்பற்றவர்களாகவோ அல்லது தங்கள் துணையை அலட்சியப்படுத்துபவர்களாகவோ இருக்க முயற்சிக்கவில்லை, ஆனால் புதிய அனுபவங்கள் மற்றும் சமூக தொடர்புகளின் சிலிர்ப்பை அவர்களால் தவிர்க்க முடியாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
