Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
இந்த 4 ராசிக்காரங்க சூழ்ச்சியால் மற்றவர்களை ஆளும் ஆபத்தானவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். சில ராசிக்காரர்கள் பொதுவாக அமைதியானவர்களாக இருந்தாலும் சில ராசிக்காரர்கள் அதீத ஆபத்தானவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் சுயநலக்காரர்களாகவும். சூழ்ச்சிக்காரர்களாகவும், மற்றவர்களை காயப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு அவர்களைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் யாரை வேண்டுமென்றாலும் பலி கொடுப்பார்கள். அவர்கள் தீய எண்ணங்கள் மற்றும் பொறாமை கொண்டவர்கள். அவர்கள் தங்கள் நன்மைக்காக யாரையும் காயப்படுத்தத் தயங்க மாட்டார்கள். இந்த பதிவில் ராசிச்சக்கரத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் மன உறுதிக்கும், பிடிவாதத்துக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் அனைத்து விஷயங்களிலும் மோசமான போட்டித்தன்மை கொண்டவர்கள், ஆனால் அவர்களின் இந்த இயல்பு பல சமயங்களில் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துவது மற்றும் இரக்கமற்ற செயல்களில் ஈடுபடுவது போன்ற காரியங்களில் வெளிப்படும்.
அவர்கள் மற்றவர்களின் எல்லைகளை மீறுவதையும், அவர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கவும் வழிவகுக்கும். மற்றவர்களின் உணர்வுகள் மீது துளியும் அக்கறையில்லாத அவர்கள் சூழ்ச்சிகளால் தங்களுக்கு வேண்டிய காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இரட்டை முகம் கொண்டவர்கள். ஒரு சமயத்தில் அவர்கள் நல்லவர்களாகத் தோன்றினாலும் பல சமயங்களில் சீரற்ற நடத்தையை வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் அவர்கள் வெறுப்பவர்களைப் பற்றி வதந்திகளை பரப்புவார்கள்.
எந்தவொரு உறவிலும் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க அவர்கள் போராடலாம். இந்த குணாதிசயங்கள் மற்றவர்களை உணர்ச்சிரீதியாக காயப்படுத்தலாம். ஆனால் அதைப்பற்றி அவர்கள் எப்போதும் கவலைப்பட மாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே தலைவருக்குரிய குணம் கொண்டவர்கள், மேலும் அனைவரையும் நன்றாக வழிநடத்தக் கூடியவர்கள், ஆனால் அவர்களின் மிகப்பெரிய பிரச்சினை அவர்கள் அதீத தற்பெருமைக் கொண்டவர்கள் மற்றும் இயல்பிலேயே அகங்காரம் கொண்டவர்கள்.
அவர்கள் சில சமயங்களில் ஆணவமாக நடந்து கொள்ளலாம் மற்றும் தங்களின் வார்த்தையே இறுதியானதாக இருக்க வேண்டுமென்ற பிடிவாதம் கொண்டவர்கள். அவர்களுக்குரிய அங்கீகாரமும், கவனமும் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் மற்றவர்களை காயப்படுத்துவார்கள் மற்றும் மட்டம் தட்டுவார்கள். மற்றவர்களை விட அவர்களின் நலனே அவர்களுக்கு எப்போதும் முக்கியம்.
விருச்சிகம்
அவர்கள் அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் மற்றும் அனைவரிடமும் கடுமையாக நடந்து கொள்பவர்கள். இருப்பினும், அவர்களின் உணர்வுகள் சமநிலையற்றதாக மாறும்போது அவர்கள் பொஸசிவ், பொறாமை மற்றும் மற்றவர்களை ஏமாற்றும் போக்குக்கு வழிவகுக்கும். இந்த குணாதிசயங்கள் அவர்களை ஆபத்தான நபர்களில் ஒருவராக மாற்றுகிறது, இது அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
