Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப புத்திசாலித்தனமா காதலிப்பார்களாம்... காதலில் இவங்கள யாராலும் ஏமாற்ற முடியாது...!
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள், அவர்களுடன் பழகும் போது நாமும் அதை உணர்ந்திருப்போம். ஜோதிட சாஸ்திரமும் இதையேதான் கூறுகிறது. அதன்படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். ஒருவர் தனித்துவமானவராக இருக்கும் போது அவர்களின் காதலிக்கும் விதமும் தனித்துவமாக இருக்கும்.
'காதலுக்கு கண்கள் இல்லை' என்ற பழமொழியை நிரூபிக்கும் விதமாக சிலர் கண்மூடித்தனமாக காதலிப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் காதலில் மூளை சொல்வதை விட மனது சொல்வதை மட்டுமே கேட்பார்கள். ஆனால் சிலர் விதிவிலக்காக புத்திசாலித்தனமாக காதலிப்பவராக இருப்பார்கள். அவர்கள் மனது சொல்வதை விட மூளை சொல்வதைக் கேட்பார்கள். அவர்களின் அணுகுமுறை எப்போதும் தந்திரமானதாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாக காதலிப்பவராக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
புத்திசாலித்தனமாக காதலிக்கும் ராசிகளில் முதலில் இருப்பது மிதுனம். மிதுன ராசிக்காரர்கள் இரட்டை ஆளுமை கொண்டவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வார்த்தைகளில் மிகவும் தீவிரமானவர்கள் மற்றும் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். இனிய வார்த்தைகளின் மூலம் தங்கள் காதல் துணையை எப்படித் அவர்கள் நினைத்ததை செய்ய வைப்பது என்பது அவர்களுக்குத் நன்கு தெரியும், எவ்வளவு பெரிய தப்பு செய்தாலும் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இயல்பாகவே ஆதிக்கம் செலுத்தம் குணம் கொண்டவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் துணை தங்களைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்று உணரும்போது சாதுர்யமாகச் செயல்படுவார்கள். உதாரணமாக, அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத சூழ்நிலையில், அதை எப்படி பெற வேண்டுமென்று அவர்கள் நன்கு அறிவார்கள், மேலும் அவர்கள் சிங்கம் போலவே இரையின் பலவீனங்களை உணர்ந்து செயல்படுகிறார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளை உடனுக்குடன் வெளிப்படுத்த மாட்டார்கள். இதன் காரணமாக அவர்களின் காதல் உறவில் எப்போதும் குழப்பமான சூழ்நிலை நீடிக்கிறது. விருச்சிக ராசிக்காரர்களின் அமைதியில்தான் வர்களின் புத்திசாலித்தனம் மறைந்துள்ளது. அவர்கள் மனதில் இருப்பதை அவர்களின் காதலர்களால் ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாது. அவர்களின் தேவைகளை அவர்கள் வாயே திறக்காமல் நிறைவேற்றிக் கொள்வார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தங்கள் காதலன்/காதலியை தங்கள் விருப்பப்படி நடக்க வைக்கிறார்கள். இது அனைவராலும் செய்யக்கூடியது அல்ல. காதல் விவகாரங்களில், அவர்கள் தங்களுக்கென சொந்த வழியைக் கொண்டுள்ளார்கள். அவர்கள் தங்கள் உறவை தங்கள் சொந்த வழியில் கையாள விரும்புகிறார்கள். அதேசமயம் அவர்கள் தங்கள் துணையின் உணர்வுகளையும் கருத்தில் கொள்கிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

