Latest Updates
-
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது!
இந்த 4 ராசிக்காரர்களுக்கு 30 வயதுக்கு பிறகுதான் ராஜயோகத்திற்கான கதவு திறக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
வாழ்க்கையில் வெற்றியும், பொருளாதாரரீதியான தன்னிறைவும் அடைய வேண்டுமென்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும். சிலர் தங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலேயே வெற்றிக்கான பாதையை கண்டறிவார்கள், சிலர் வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் வெற்றிக்கான பாதையைக் கண்டறிவார்கள். சிலருக்கோ கடைசிவரை இந்த கதவு திறப்பதே இல்லை.
சில ராசிக்காரர்களுக்கு, 30 வயதுக்கு மேல்தான் வெற்றிக்கான திறவுகோல் கிடைக்கும், ஏனெனில் அவர்கள் இந்த காலக்கட்டத்தில்தான் முதிர்ச்சியடைந்து, தங்கள் இலக்குகளை சரியாக கண்டறிந்து, தங்கள் உண்மையான திறனைக் கண்டறிவார்கள்.

இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளில் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள், ஆனால் வயதாகும்போது வலிமையானவராகவும், புத்திசாலியாகவும் மாறுகிறார்கள். வாழ்க்கையின் பிற்பகுதியில் மிகப்பெரிய வெற்றியை அடையப் போகும் ராசிகாரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்கள் லட்சியத்திற்கும், அசைக்க முடியாத உறுதிக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் வெறித்தனமாக வேலை செய்பவர்கள், எப்போதும் தங்கள் இலக்குகளை நோக்கி இடைவிடாமல் முன்னேறி செல்கிறார்கள். இருப்பினும், அவர்களின் உண்மையான வெற்றி பெரும்பாலும் வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் வருகிறது. ஏனென்றால் மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் மட்டுமல்ல, அவர்கள் பொறுமையாகவும் இருக்கிறார்கள், மேலும் உண்மையான வெற்றி ஒரே இரவில் கிடைத்துவிடாது என்பதை புரிந்து கொள்கிறார்கள்.
30 வயதுக்கு மேல் மகர ராசிக்காரர்கள் தங்கள் பல வருட அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் பலன்களைப் பெறத் தொடங்குகிறார்கள். காலப்போக்கில் அவர்களின் நிலையான முன்னேற்றம், இளம் வயதில் அதிக வெற்றி பெற்றவர்களை விட பெரிய உயரங்களை அடைய வழிவகுக்கிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ராசிச்சக்கரத்தின் மிகவும் புத்திசாலிகளாக கருதப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் அனைத்தும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்பதில் தீவிர ஆர்வம் கொண்டவர்கள். இந்த குணாதிசயங்கள் அவர்களின் ஆரம்ப ஆண்டுகளில் தேவையற்ற மன அழுத்தம் மற்றும் கவலைக்கு வழிவகுக்கும் என்றாலும், கன்னி ராசிக்காரர்கள் தங்கள் 30 வயது மற்றும் அதற்கு மேல் நுழையும் போது அவை வெற்றிக்கான கதவை திறக்கின்றன.
இந்த காலகட்டத்தில், அவர்கள் தங்கள் திறமைகளை மிகவும் உற்பத்தித் திறன் கொண்ட முறையில் வழிநடத்தக் கற்றுக்கொண்டனர், மேலும் அதை அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் குறிப்பிடத்தக்க உயரத்தை அடைவதற்கான ஒரு கருவியாக மாற்றுகிறார்கள். அவர்கள் புத்திசாலித்தனமான, கணக்கிடப்பட்ட முடிவுகளை எடுப்பார்கள் மற்றும் சிறந்த பிரச்சனை தீர்க்கும் திறன் கொண்டவர்கள். அவர்களின் பணி நெறிமுறை, கன்னி ராசிக்காரர்களின் ஒழுங்கு மற்றும் செயல்திறனுக்கான உள்ளார்ந்த விருப்பத்துடன் இணைந்து, 30 வயதுக்கு மேல் மிகப்பெரிய சாதனைகளுக்கு வழிவகுக்கிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் மனஉறுதி மற்றும் தகவமைப்பு திறனுக்கு பெயர் பெற்றவர்கள். இது அவர்களின் இளமைப் பருவத்தில் அவர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்தக்கூடும், ஆனால் அவர்கள் 30 வயதை எட்டும்போது, இந்த பண்புகள் அவர்களை வெற்றியாளர்களாக மாற்றுகிறது. ரிஷப ராசிக்காரர்கள் தற்காலிக வெற்றியில் ஒருபோதும் திருப்தி அடையமாட்டார்கள்.
அவர்கள் நீண்டகால வெற்றியில் கவனம் செலுத்துகிறார்கள், மேலும் தங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்கவும் பொறுமையாக காத்திருக்கவும் தயாராக இருக்கிறார்கள். இது அவர்களை நிதிகளை நிர்வகிப்பதிலும், வெற்றிகரமான எதிர்காலத்திற்கான உறுதியான அடித்தளத்தை உருவாக்குவதிலும் சிறந்தவர்களாக மாற்றுகிறது. அவர்கள் தங்கள் பொறுப்புகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள், அவற்றை நிறைவேற்ற தேவையான அனைத்தையும் செய்வார்கள். எனவே அவர்கள் 30 வயதுக்குப் பின் வெற்றிக்கான கதவைத் திரிகிறார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் கவர்ச்சிகரமான மற்றும் துடிப்பான ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் இயற்கையான தலைவராக பிறந்தவர்கள், எப்போதும் பொறுப்பேற்று விஷயங்களைச் செயல்படுத்தத் தயாராக இருப்பார்கள். அவர்கள் சில சமயங்களில் இளமைப் பருவத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகக் காணப்பட்டாலும், அவர்கள் முதிர்ச்சியடையும் போது, இந்தத் தலைமைத்துவப் பண்புகளை மிகவும் பயனுள்ள வழிகளில் பயன்படுத்தக் கற்றுக்கொள்கிறார்கள்.
30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் சிம்ம ராசிக்காரர்கள் பெரும்பாலும் அதிகாரப் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள், இந்த காலகட்டத்தில் அவர்களின் இயல்பான தலைமை குணம் அவர்களை பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறது. அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் அவர்களின் ஆர்வம் இணைந்து அவர்கள் எந்தத் துறையைத் தேர்வுசெய்தாலும் அதில் அவர்களை மிகவும் வெற்றிகரமானவராக மாற்றுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












