Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
இந்த 4 ராசிக்காரங்க பயமே இல்லாம பிறந்தவர்களாம்... இவங்கள யாராலையும் தடுக்க முடியாதாம்...!
மனிதர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒரு சிறந்த மற்றும் அடிப்படையான குணம் தைரியமாகும். தைரியம் அனைவரிடமும் இருந்தாலும் அது அசட்டு தைரியமாக இருக்கக்கூடாது. சிலர் ஆபத்தை எதிர்நோக்கிச் சிரிக்கின்ற வகையிலும், தெரியாத விஷயங்களை நோக்கி நம்பிக்கையுடன் அணிவகுத்துச் செல்லும் வகையிலும், அச்சமற்ற குணத்துடன் பிறக்கிறார்கள்.
இவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே தங்கள் பெற்றோரையும், ஆசிரியரையும் நடுங்க வைப்பார்கள், எப்போதும் அதிகாரத்திற்கு சவால் விடுகிறார்கள், வரம்புகளைத் தள்ளுகிறார்கள், இவர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சவால்களை எதிர்கொள்ளும் இயல்பான தைரியத்துடன் பிறந்தவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் போரின் கிரகமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள், அவர்கள் இயற்கையாகவே வீரர்களாக பிறந்தவர்கள். குழந்தைகளாக, அவர்கள் வகுப்பில் குறும்பு செய்து கொண்டே இருப்பார்கள் அல்லது ஆசிரியரின் ஒவ்வொரு வார்த்தையையும் கேள்வி கேட்கத் துணிந்தவர்களாக இருக்கலாம்.
அவர்கள் ஒருபோதும் சவாலை எதிர்கொள்ள பயந்ததில்லை, மேலும் அவர்களின் தைரியம் மற்றவர்களை பயமுறுத்துவதாக இருக்கும். புதிய முயற்சிகளில் இறங்கினாலும் அல்லது அதிகாரத்தை நிலைநிறுத்துவதாக இருந்தாலும் மேஷ ராசிக்காரர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பயமென்றால் என்னவென்றாலே தெரியாத மற்றொரு ராசியினராவார். அவர்கள் மாற்றத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படுகிறார்கள், மேலும் அவர்களின் தீவிரத்திற்காக அவர்கள் அறியப்படுகிறார்கள். மாணவர்களாக, விருச்சிக ராசிக்காரர்கள் அமைதியானவர்களாக இருந்திருக்கலாம், அவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்திருக்கலாம்.
மற்றவர்கள் வெட்கப்படும் இருண்ட, ஆழமான உணர்ச்சிகளை அவர்கள் எளிதில் கையாளுவதால், அவர்கள் எளிதில் பயப்பட மாட்டார்கள். நெருக்கடியான சூழ்நிலையில் விருச்சிக ராசிக்காரர்கள் உங்கள் பக்கத்தில் இருந்தால் நீங்கள் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை. புயலே அடித்தாலும், எரிமலை வெடித்தாலும் அவர்கள் பதட்டப்பட மாட்டார்கள்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே அதீத தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். இதனால் பயம் அவர்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கும். குழந்தைகளாக, அவர்கள் அநேகமாக வகுப்பில் குறும்புகளின் ஆரம்பப் புள்ளியாகவோ அல்லது கூட்டத்தின் தலைவர்களாகவோ இருக்கலாம், தங்கள் இருப்பை நிலைநிறுத்த அவர்கள் பயப்பட மாட்டார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் பயமில்லாதவர்கள். அவர்கள் கவனத்தை ஈர்த்து, ஆபத்தை ஏற்படுத்தும் சங்கடங்களை எளிதில் விரட்டி, வெற்றியை அடையும் அளவுக்கு தைரியமாக இருக்கிறார்கள். ஆசிரியர்கள் அவர்களை நேசிப்பார்கள் அதேசமயம் அவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்ற பயத்திலும் இருந்திருப்பார்கள்.
தனுசு
சாகசக்காரர்களான தனுசு ராசிக்காரர்கள் குழந்தைகளாக இருந்தபோது, "ஏன்?" என்று கேட்பதை ஒருபோதும் நிறுத்தாதவர்கள் மற்றும் அவர்களின் முடிவில்லா ஆர்வத்துடன் அடிக்கடி ஆசிரியர்களுக்கு சவால் விடுவார்கள்.
தனுசு ராசிக்காரர்கள் எதற்கும் பயப்பட மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் வாழ்க்கையை ஒரு பெரிய சாகசமாக பார்க்கிறார்கள். அவர்கள் ரிஸ்க் எடுப்பவர்கள், எதையும் ஒரு முறை முயற்சி செய்பவர்கள், பின்விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். எதையும் துணிச்சலுடன் செய்வது அவர்களுக்கு போதை போன்றது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

