Latest Updates
-
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க
நீங்க பிறந்த ராசி என்னனு சொல்லுங்க... கடவுள் உங்களுக்கு கொடுத்த வரமும், சாபமும் என்னனு நாங்க சொல்றோம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசியும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள். கடவுள் படைத்த அனைத்து மனிதர்களுக்கும் சில நல்ல குணங்களையும், தீய குணங்களையும் அளிக்கிறார். இதில் எந்த குணம் அதிகமாக இருக்கிறதோ அதேபொறுத்தே அவர்கள் சமூகத்தில் எப்படிப்பட்டவர்கள் என்பதும், அவர்களின் எதிர்காலமும் நிர்ணயிக்கப்படுகிறது .
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவர் பிறக்கும் போதே அவர்களுக்கென சில வரங்களும், சாபங்களும் கிடைக்கிறது. அதை சரியாக பயன்படுத்துபவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். ஜோதிட நிபுணர் கோபால கிருஷ்ணர் ஒவ்வொரு ராசிக்கும் இயற்கையாகவே இருக்கும் வரம் என்ன மற்றும் சாபம் என்னவென்று நம்முடன் பகிர்ந்துள்ளார். அதன்படி உங்கள் ராசிக்கு இருக்கும் வரமும், சாபமும் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
எங்கும் எதிலும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்று தீராத ஆர்வம் கொண்டவர்கள் மேஷ ராசிகாரர்கள். தலைமை பதவியை நோக்கியே இருக்கும் இவர்களின் வாழ்வின் படிகள். உங்களுக்கு இயல்பாகவே ஒன்றின் மீது ஏற்படும் பேரார்வமே உங்களின் வரம். அதை மற்றவர்கள் நடிப்பு என்று சுட்டிக்காட்டும் சூழ்நிலைகள் உருவாவதே உங்களின் சாபமாக மாறிவிடுகிறது.
ரிஷபம்
விடாப்பிடியாக எடுத்த செயலை செய்து முடிப்பதில் வல்லவர்கள் ரிஷப ராசிகார்கள். எண்ணியதை தடைகளை தகர்த்து மன உறுதியோடு திறம்பட செய்து முடிப்பதில் வல்லவர்கள். உங்கள் கொள்கையில் விடாப்பிடியாக இருப்பதே உங்கள் வரமாகிறது. ஆனால் இந்த போக்கால் நீங்கள் விரும்பியது நிறைவேறும் வரை எதற்கும் திருப்தியடையாமல் இருப்பதே உங்களின் சாபமாக இருக்கிறது.
மிதுனம்
இரட்டை ஆளுமை பண்பை கொண்டிருப்பவர்கள் மிதுனம் ராசிகாரர்கள். சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தங்களை மாற்றி கொண்டு நிலைமையை கட்டுக்குள் வைத்து கொள்வதில் மிகவும் சிறப்பானவர்கள். உங்களது உள்உணர்வுகள் நம்பகமானதாக இருப்பதே உங்களின் வரம். ஆனால் அதை சந்தேகித்து நம்பலாமா வேண்டாமா என்கிற குழப்பமே உங்களின் சாபமாக அமைகிறது.
கடகம்
அன்பையும் அக்கறையையும் மற்றவர்களுக்கு தாராளமாக வழங்குவதில் முதல் இடம் கடக ராசிக்காரர்கள். எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள். இவர்களுக்கு மற்றவர்கள் மீது ஏற்படும் இரக்க குணமே வரமாகிறது. அதையே காரணமாக வைத்து மற்றவர்கள் எளிதில் ஏமாற்றி விடுவார்கள். சிலர் துரோகிகளாக மாறிவிடுவதும் தான் இவர்களுக்கு சாபமாக மாறி போகிறது.
சிம்மம்
அனைத்திலும் தங்கள் கை ஓங்கி இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். தங்களின் நலனின் அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு உறவை தக்க வைத்து கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதற்கான அர்ப்பணிப்பு அவர்களின் வரமாகிறது. அதே உறவால் அவர்கள் பல உளைச்சலை சந்திப்பது அவரின் சாபமாக இருக்கிறது.
கன்னி
எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு துல்லியமாக செய்ய கூடியவர்கள் கன்னி ராசிக்காரர்கள். இவர்கள் மிகவும் புத்தி கூர்மை வாய்ந்தவர்கள். எதையும் பல முறை அலசி ஆராய்ந்து பார்க்கும் குணம் இவர்களின் வரம். ஆனால் அதையே மற்றவர்களை குற்றம் சொல்லும் போது நக்கீரனாக மாறிவிடும் போது சாபமாகிவிடுகிறது.
துலாம்
வாழ்வின் அனைத்து சூழ்நிலையிலும் சமநிலையை கடைபிடிப்பவர்கள் துலாம் ராசிக்காரர்கள். இவர்கள் உலகில் அன்பை பரப்புபவர்கள். எந்த ஒரு செயலிலும் இருக்கும் நல்லது கெட்டதை பிரித்து எல்லா பக்கங்களையும் யோசித்து பார்க்கும் திறனே இவர்களின் வரம். இதனால் முடிவெடுப்பதில் ஏற்படும் தாமதமே இவர்களின் சாபம்.
விருச்சிகம்
தந்திரமாக காரியங்களை செய்து நினைத்ததை நடத்தி முடித்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். அன்பனாலும் சரி பகையானாலும் சரி அளவிற்கு அதிகமாக கொட்டுவதில் சிறந்தவர்கள். பிறரை பற்றி எளிதாக புரிந்து கொண்டு அவர்களை எடை போடுவதில் வல்லவர்களாக இருப்பதே வரமாகிறது. இதனால் சில விஷயங்களை பாரபட்சமாக செய்வதாக பெயர் எடுப்பதே சாபமாக இருக்கிறது.
தனுசு
தங்களின் சுதந்திரத்திற்கும் ஆசைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தனுசு ராசிக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களின் விமர்சனங்களை முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். ரிஸ்க் எடுப்பது எல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என துணிச்சலாக ரிஸ்க் எடுப்பது இவர்களின் வரம். அதனால் பல பிரச்சனைகளிலும் மாட்டிக் கொள்வது இவர்களுக்கு சாபமாக அமைகிறது.
மகரம்
தங்களுக்கென தனி அணுகுமுறையையும் தொலைநோக்கு பார்வையும் கொண்டவர்கள் மகர ராசிக்காரர்கள். வாழ்வின் அனைத்து விஷயங்களையும் புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள். இவர்கள் ஒழுக்கமான நடைமுறையை கடைபிடிப்பது இவர்களின் வரம். மற்றவர்களும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அவர்களுக்கே சலிப்பை ஏற்படுத்தி சாபமாக மாறிவிடுகிறது.
கும்பம்
எதிலும் தன்நம்பிக்கையோடு செயல்படுவதில் கும்ப ராசிக்காரர்களை மிஞ்ச ஆள் இல்லை. இவர்கள் தான தர்மம் செய்வதில் சிறந்தவர்கள். எங்கும் எதிலும் அப்பட்டமான நேர்மையை கடைபிடிப்பதே இவர்களுக்கு வரமாகிறது. பெரும்பாலான நேரங்களில் இதுவே உங்கள் வாழ்வின் தடைக்கல்லாகி சாபமாக மாறிவிடுகிறது.
மீனம்
எதிலும் இளகிய மனம் கொண்டவர்கள் மீனம் ராசிக்காரர்கள். இவர்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்கள். இவர்களின் மிதமிஞ்சிய கற்பனை திறனே இவர்களின் வரமாக அமைகிறது. இல்லாத ஒன்றை கற்பனை செய்து கொண்டு கஷ்டப்படும் போது அதுவே சாபமாகவும் இருக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
