Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Weekly Numerology: இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்..
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 13 அக்டோபர் 2024 முதல் 19 அக்டோபர் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் இந்த தேதகளில் பிறந்தவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். வணிகர்கள் நல்ல முன்னேற்றத்துடன், லாபத்தையும் பெறலாம். வாழ்க்கைத் துணைக்கு நேர்மையாக இருப்பீர்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பெரிய பிரச்சனை இருக்காது. இருப்பினும், தலைவலி, சரும எரிச்சல் போன்றவற்றால் அவதிப்படக்கூடும்.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வேலையை மிகவும் கவனமாக செய்வீர்கள். பணியிடத்தில் நல்ல பெயரைப் பெறுவதே உங்கள் நோக்கமாக இருக்கும். வணிகர்கள் வணிக வட்டாரங்களில் நல்ல பெயரைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவைப் பேணுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சளி தொல்லையால் அவதிப்படலாம்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணியிடத்தில் வேலைப்பளுவை சந்திக்கலாம். இதன் விளைவாக உங்களால் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியாது. வியாபாரிகளுக்கு இந்த வாரம் மோசமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். மாணவர்கள் படிப்பில் கவனச்சிதறல்களை சந்திக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வயிற்று பிரச்சனையால் சிரமப்படக்கூடும்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களால் பணியிடத்தில் சிறப்பாக செயல்பட முடியும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் தேடி வரும். வாழ்க்கைத் துணையுடன் நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் இருவரிடைய அன்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நரம்பு பிரச்சனைகளால் அவதிப்படலாம்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறலாம். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணியிடத்தில் நல்ல மரியாதையையும், பாராட்டையும் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரம் இழப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை அவ்வளவு இனிமையாக இருக்காது. மாணவர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அழற்சி, செரிமான பிரச்சனைகளால் அவதிப்படலாம்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு தங்கள் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் போகும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சற்று கடினமாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். காதல் வாழ்க்கை சற்று சுமாராகவே இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கால் மற்றும் மூட்டு வலியால் சிரமப்படுவீர்கள்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் பணியிடத்தில் தங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் நிறைய லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இந்த வாரம் அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
