Latest Updates
-
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள்
Weekly Numerology: இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு பண மழை கொட்டப்போகுது..
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 06 அக்டோபர் 2024 முதல் 12 அக்டோபர் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் கடினமானதாக இருக்கும். அதுவும் வேலைப்பளு மற்றும் சவால்களை அதிகம் சந்திக்க நேரிடும். இந்நிலையில் உங்களால் சமாளிக்க முடியாமல் போகலாம். தம்பதிகளுக்கு இடையே பிரச்சனைகள் அதிகரிக்கலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியால் அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும்.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வேலையில் சவால்களை சந்திப்பார்கள். இத்னால் வேலையை செய்ய முடியாமல் சிரமப்படக்கூடும். வியாபாரிகள் போட்டியாளர்களால் ஏமாற்றப்படலாம். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது. மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சளி, இருமல் பிரச்சனைகளால் அவதிப்படலாம்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரலாம். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் கையில் பணம் அதிகம் புரளும். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் பணியிடத்தில் சம்பள உயர்வைப் பெறலாம். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறுசிறு உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு இந்த வாரம் செழிப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணியிடத்தில் தங்களின் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்களின் திறமைகள் இந்த வாரத்தில் நல்ல பாராட்டைப் பெறும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தோல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் வேலைப்பளுவை சந்திப்பதோடு, தவறுகளையும் செய்யலாம். வணிகர்களின் திட்டங்கள் இந்த வாரத்தில் இழப்பை சந்திக்க வைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சற்று மோசமாக இருக்கும். புரிதலின்மையால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படுவார்கள். சரும அழற்சி பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும்
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இந்த வாரம் தங்கள் வேலையில் திருப்தி இல்லாததால் வேலையை மாற்ற நினைக்கலாம். வியாபாரிகள் இந்த வாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கால் வலி மற்றும் தோல் பிரச்சனைகளால் அவதிப்படலாம்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அரசு வேலையை செய்து வந்தால், இந்த வாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். வாழ்க்கைத்துணையுடனான உறவில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். இந்த வாரத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, யோகா, தியானம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications