இந்த வாரம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிகளுக்கு மோசமாவும் இருக்கப்போகுது...

Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 2024 நவம்பர் 02 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Weekly Lucky And Unlucky Zodiac Signs From 27 October - 02 November 2024 In Tamil

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தொடர்பான பிரச்சனைகள் தீரும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் தீரும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் நேர்மறை எண்ணங்களுடன் நிறைந்திருப்பீர்கள். வேலைகளில் முழு கவனத்தை செலுத்தி வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாரத்தின் இரண்டாம் பாதியில் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் உங்கள் மீது இருக்கும் மற்றும் உங்கள் நிதி நிலை வலுவடையும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் வேலைகள் தடையின்றி நிறைவேறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சாதகமாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அருமையாக இருக்கும். உங்கள் பாதையில் சில தடைகள் இருந்தாலும், நீங்கள் முன்னேறி வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். வியாபாரிகளுக்கு சில வேலைகளைத் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் மூலம் இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவுகளைப் பொறுத்தவரை இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் பண விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக செலவு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் வருத்தப்பட வேண்டியிருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்போது பொறுமையாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இந்த வாரம் சில ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். படிப்பில் ஆர்வம் குறையும். அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்தால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வார இறுதியில் குறுகிய தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். உங்களின் வேலை பாதியிலேயே நின்றிருந்தால், அதை இந்த வாரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்தக் காலகட்டத்தில் மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் செலவுகளை கண்காணிக்க வேண்டும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை தொடர்பான கவலைகள் இருக்கும். அதிகம் கவலைப்படுவதால் எதுவும் அடைய முடியாது. நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் மற்றும் உங்களால் முடிந்ததை கொடுக்க முயற்சிக்க வேண்டும். நிதி ரீதியாக இந்த வாரம் வருமானத்தை விட செலவுகள் கூடும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் இல்லையெனில் எதிர்கால திட்டங்கள் தடைபடலாம். உங்கள் குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட முடியாமல் போவதால், அது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, October 28, 2024, 12:20 [IST]
Desktop Bottom Promotion