இந்த வாரம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிகளுக்கு வேதனையாகவும் இருக்கப்போகுது...

Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2025 மார்ச் 23 ஆம் தேதி முதல் 2025 மார்ச் 29 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Weekly Lucky And Unlucky Zodiac Signs From 23 March - 29 March 2025 In Tamil

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடந்த வாரத்தை விட சற்று சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதால் உங்கள் உற்சாகமும் தைரியமும் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளும் கடின உழைப்பும் பணியிடத்தில் அங்கீகரிக்கப்படும். வாரத்தின் நடுப்பகுதியில் உயர் அதிகாரிகளின் உதவியுடன் லாபம் ஈட்ட வாய்ப்புகள் இருக்கும். இந்த வாரம் உங்கள் விருப்பம் நிறைவேறக்கூடும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். காதல் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு நல்ல பாராட்டைப் பெறும். உங்களுக்கு கூடுதல் பொறுப்புக்கள் வழங்கப்படலாம். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். இருப்பினும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் சற்று குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். வேலை செய்பவராக இருந்தாலும் சரி, தொழிலதிபராக இருந்தாலும் சரி, எந்தவொரு முக்கியமான முடிவையும் எடுப்பதற்கு முன் உங்கள் நலம் விரும்பிகளின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படலாம். வேலை செய்பவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலையில் உங்கள் எதிரிகள் தடைகளை உருவாக்கக்கூடும் என்பதால், அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டிருக்கும். நிதி சிக்கல்கள் உங்களை கவலையடையச் செய்யும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். ஆனால் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு உணவில் கவனமாக இருப்பதோடு, உடற்பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். பணியிடத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படாது. வேலையில் மாற்றத்தை எதிர்பார்த்திருந்தால், இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் வேலை தொடர்பான சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். தொழில் ரீதியாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். இந்த வாரம் நீங்கள் வியாபாரத்தில் விரும்பிய லாபத்தைப் பெற அல்லது சந்தையில் சிக்கித் தவிக்கும் பணத்தை திரும்பப் பெற கூடுதல் முயற்சி மற்றும் கடின உழைப்பைச் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ப மட்டுமே எந்த வேலையையும் மேற்கொள்ளுங்கள். வாரத்தின் பிற்பகுதியில், உங்கள் துணையைப் பற்றி நீங்கள் கவலைப்படலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, March 24, 2025, 14:03 [IST]
Desktop Bottom Promotion