Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 2024 அக்டோபர் 26 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கும். சொத்துக்களை வாங்கவோ அல்லது விற்கவோ விரும்பினால், இந்த வாரம் சாதகமாக இருக்கும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் முடிவுகள் சாதகமாக வரும். அன்புக்குரியவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் திட்டமிட்ட அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உங்கள் பொறுப்புகளை நேர்மையாக நிறைவேற்றுவீர்கள். நீங்கள் வீட்டு ஆடம்பர பொருட்களையும் வாங்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிமையாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சொத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தால், தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் சரியான பலனைப் பெறுவீர்கள். உங்கள் தொழிலை விரிவுபடுத்தும் கனவு இருந்தால், இந்த வாரத்தில் நிறைவேறும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் விரைவில் நிறைவேறும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சில வேலைகள் திடீரென நின்று போகலாம் மற்றும் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிக்கலான சூழ்நிலைகளில் பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் நிறைய சிரமப்படுவீர்கள். வேலையில் அதிக கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும். தொழிலதிபர்கள் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த வாரத்தில், உங்கள் எதிரிகள் உங்களுக்கு சில பிரச்சனைகளை உருவாக்கலாம். தம்பதிகளுக்கு இடையே தேவையில்லாத விஷயங்களால் கருத்து வேறுபாடுகள் வரலாம். ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், அலட்சியமாக இருக்காதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உங்கள் பேச்சு கடுமையாக இருக்கும். இதனால் விமர்சனங்களை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் உங்கள் கவனக்குறைவால், நல்ல வாய்ப்பு உங்கள் கையை விட்டு நழுவக்கூடும்.
குடும்ப வாழ்க்கையில் அமைதி குலைந்து போகலாம். வீட்டில் பணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வார இறுதியில் திடீரென்று பயணம் செய்ய நேரிடலாம். உங்களின் இந்தப் பயணம் மிகவும் சோர்வாக இருக்கும். உடல்நலம் குறித்து நீங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், இல்லையெனில் சில நாள்பட்ட நோய்கள் உங்களை தொந்தரவு செய்யலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications