இந்த வாரம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிகளுக்கு சவாலானதாகவும் இருக்கப்போகுது...

Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 2024 அக்டோபர் 19 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Weekly Lucky And Unlucky Zodiac Signs From 13 October - 19 October 2024 In Tamil

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை முக்கியமானதாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆடம்பரத்திற்காக அதிக பணம் செலவழிப்பீர்கள். உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால், அதை திரும்பப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மனரீதியாகவும் நன்றாக இருப்பீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிமையாக இருக்கும். இந்த வாரத்தில் பெரிய வெற்றியைக் காண்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். சில புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பண பிரச்சனையை எதிர்கொண்டால் உங்கள் பிரச்சனை இந்த வாரத்தில் தீரும். பெற்றோருடனான உறவில் ஒருங்கிணைப்பு இன்னும் சிறப்பாக இருக்கும். வெளிநாடு சென்று படிக்கும் கனவு காணும் மாணவர்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். ஆனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் சுமாராக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். இதன் மூலம் முழுப் பலனையும் பெறுவீர்கள். உங்களின் திறமையின் அடிப்படையில் பணியிடத்தில் பெரும் வெற்றியை அடைவீர்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. உங்கள் வருமானமும் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் தங்கள் சரியான முடிவுகளால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நின்று போன வருமானம் மீண்டும் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவழிப்பதன் மூலம் மன அமைதி பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்.

இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். வேலைப்பளு அதிகமாக இருந்தால், திட்டமிட்டு வேலையை செய்ய முயற்சிக்க வேண்டும். இந்த வாரம் கவனக்குறைவு உங்கள் முன்னேற்றத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வாரத்தின் பிற்பாதியில் திடீரென நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி வரும். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு போதுமான நேரத்தை கொடுக்க முடியாமல் போகலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப மட்டுமே செலவு செய்வீர்கள். வார இறுதியில் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு கலவையாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள், சில சமயங்களில் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். இல்லையெனில் சில பழைய நோய்கள் உங்களை மீண்டும் தொந்தரவு செய்யலாம். வியாபாரிகள் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய முதலீடுகள் செய்ய நேரம் சரியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிக பணிச்சுமையால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் நிதி நிலை மேம்படும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில் வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்ய வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதாரணமாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான எந்தவொரு கவலையும் உங்களைத் தொந்தரவு செய்யலாம். வார இறுதியில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, October 14, 2024, 20:03 [IST]
Desktop Bottom Promotion