Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இந்த வாரம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிகளுக்கு சிரமமாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அவற்றின் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 டிசம்பர் 08 ஆம் தேதி முதல் 2024 டிசம்பர் 14 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! வாரத்தின் தொடக்கத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களான பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவை கிடைக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் நல்ல செய்திகள் நிறைந்ததாக இருக்கும். வார தொடக்கத்தில் நல்ல செய்திகள் வரும். குடும்பத்துடன் எங்காவது வெளியூர் செல்ல திட்டமிடலாம். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் புதிய வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில் தொடங்க இது ஒரு நல்ல வாரம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுகு நல்ல செய்திகள் வந்து குவியும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு வலுவடையும். காதலித்து வந்தால், காதல் திருமணம் நடைபெறலாம். நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சொத்து சம்பந்தமாக உங்கள் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்த வாரம் யோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். எதில் கையெழுத்து போடுவதாக இருந்தாலும் கவனமாக யோசித்த பின்னரே போட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிச்சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கை டென்சனாக இருக்கும். மூன்றாம் நபரால் பிரச்சனை வரலாம். எனவே இந்த வாரம் மற்றவர்களின் பேச்சை கேட்டு நடக்காதீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். நிதி நிலை பலவீனமாக இருக்கும். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர ஒருங்கிணைப்பு மோசமடைய வாய்ப்பு உள்ளது. காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் கடினமாக இருக்கும். எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன், வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
