Latest Updates
-
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
வார ராசிபலன் (27 July 2025-02 August 2025)- இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு போராட்டம் நிறைந்ததாக இருக்கும்
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2025 ஜூலை 27 ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 02 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு பரபரப்பாக இருக்கும். பேச்சிலும் நடத்தையிலும் பணிவாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்வோருடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்களுக்கு வாரத்தின் இரண்டாம் பாதி முதல் பாதியை விட மிகவும் நல்லதாக இருக்கும். பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை தேவை. மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. இந்த வாரம் உறவுகளைப் பொறுத்தவரை சாதாரணமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மிதமானதாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். சிறிது காலமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வணிக ரீதியாக இந்த வாரம் நல்லதாக இருக்கும். திட்டமிட்ட வேலை சரியான நேரத்தில் முடிக்கப்படும். வணிகர்களுக்கு இந்த வாரம் இனிமையாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு பாடுபடுவீர்கள். வாரத்தின் முதல் பாதியில் சில சிறிய பிரச்சினைகளை சந்திக்கக்கூடும், ஆனால் அவை விரைவில் நீங்கும். பணிபுரிபவர்கள் இந்த வாரம் சற்று பிஸியாக இருப்பார்கள். பழைய நண்பரை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் உணவு மற்றும் பானத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் நிறைந்ததாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் சில பெரிய பொறுப்புகள் வழங்கப்படலாம். பணியிடத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிகப்படியான வேலை காரணமாக உடல் மற்றும் மன சோர்வும் இருக்கும். நிதி ரீதியாக, வாரத்தின் தொடக்கம் நன்றாக இருக்கும். ஆனால் போக போக சில வேலைகளில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்வதால் உங்கள் நிதி நிலை பாதிக்கப்படலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் மிகவும் நிம்மதியாக இருக்கும். வேலை பற்றிய கவலை இருந்தால், அது நீங்கும். ஆரோக்கிய பிரச்சனைகளல் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். தொழில் மற்றும் வணிகத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் சாதகமாக இருக்கும். அதிகப்படியான வேலை காரணமாக நீங்கள் சோர்வாக இருப்பீர்கள். இருப்பினும் வேலையை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வணிகர்களுக்கு சிறப்பாக இருக்கும். இருப்பினும் எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு நலம் விரும்பிகளின் ஆலோசனையைப் பெற வேண்டும். உறவுகளைப் பொறுத்தவரை, இந்த வாரம் இனிமையாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். திடீரென்று ஒரு குறிப்பிட்ட வேலைக்கு அதிக அளவு பணத்தை செலவிட வேண்டியிருக்கும். இதனால் நிதி நிலைமை மோசமடையக்கூடும். வணிகர்கள் இந்த வாரம் எந்த வணிக முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும். வாரத்தின் முதல் பாதி இரண்டாம் பாதியை விட சற்று குறைவான லாபம் கிடைக்கும். ஆனால் நஷ்டத்தை சந்திக்கமாட்டீர்கள். பங்குகளில் முதலீடு செய்பவர்கள் கவனமாக முடிவுகளை எடுக்க வேண்டும். குறுக்குவழிகளில் எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். காதல் உறவுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உடல்நலம் மற்றும் உறவுகள் இரண்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். வேலை செய்பவர்கள் பணியிடத்தில் தங்கள் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோருடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வணிகத்தில் முயற்சிகளுக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். சில உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப மகிழ்ச்சியைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிதமானதாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் நன்றாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் சாதகமான சூழ்நிலைகள் இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். வணிகத்தில் நீங்கள் விரும்பிய லாபத்தைப் பெறுவீர்கள். உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்தால் தடைகளை நீக்கி வெற்றி பெறுவீர்கள். விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணப் பிரச்சினை தீர்க்கப்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் சுமாராக இருக்கும். திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் தடைகளை சந்திக்க நேரிடும். பேச்சு மற்றும் நடத்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் காரணமாக உங்கள் திருமண வாழ்க்கை மற்றும் காதல் உறவு பாதிக்கப்படலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் மன பதட்டம் மற்றும் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கலாம். அதிக வேலை காரணமாக நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வாக இருப்பீர்கள். வணிகர்கள் ஆபத்தான முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு பரபரப்பாக இருக்கும். உங்கள் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிகப்படியான வேலை காரணமாக, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வாக இருப்பீர்கள். மார்கெட்டிங் அல்லது ஊடக துறையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு சற்று கடினமாக இருக்கலாம். காதல் உறவில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். துணையின் உணர்வுகளை புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் நிம்மதியாக இருக்கும். ஒரு பெரிய பிரச்சனையைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், இந்த வாரம் அதற்கு தீர்வு கிடைக்கும். தொழில் ரீதியாக இந்த வாரம் மிதமான பலன்கள் கிடைக்கும். பணத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தால், உடனே செய்யாமல், அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெறுங்கள். பணிபுரிபவர்கள் இலக்கை அடைய முடியாமல் கவலைப்படுவீர்கள். மோசமான உடல்நலம் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் உங்கள் சிறந்த செயல்திறனில் தடையை இடையூறை ஏற்படுத்தும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். காதல் வாழ்க்கை சற்று சிரமமாக இருக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! சற்று மோசமாகவே இருக்கும். தொழிலதிபர்கள் வியாபாரத்தில் மெதுவான முன்னேற்றத்தையும் லாபத்தையும் காண்பார்கள். செலவுகள் பண வரவை விட அதிகமாக இருக்கும். நிதி நிலைமை சற்று பாதிக்கப்படும். மாணவர்களுக்கு இந்த வாரம் சற்று மோசமாக இருக்கும். கடினமாக உழைப்பதன் மூலம் மட்டுமே விரும்பிய பலனைப் பெற முடியும். வருமான ஆதாரங்கள் பாதிக்கப்படலாம். சிக்கிய பணத்தை பெறுவதில் சிரமத்தை சந்திக்கலாம். நல்ல உறவுகளைப் பராமரிக்க, மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் நன்றாக இருக்கும். திட்டமிட்ட வேலைகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் அதிக பொறுப்பை ஏற்றுக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது பிரச்சனையை ஏற்படுத்தும். வியாபாரிகள் ஆபத்தான முதலீடுகளை செய்வதை தவிர்க்க வேண்டும். குறுக்குவழிகள் மூலம் லாபம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். கடந்த காலத்தில் உங்கள் வருமானம் எங்காவது தடைபட்டிருந்தால், இந்த வாரம் நீங்கள் அந்த கவலையிலிருந்து விடுபடலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











