Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
வார ராசிபலன் (15 September 2024 To 21 September 2024)-இந்த வாரம் இந்த ராசிக்காரங்க ஆரோக்கியம் ஆபத்தில் இருக்கு
நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 2024 செப்டம்பர் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்களுக்கென போதுமான நேரத்தை நீங்கள் பெறுவீர்கள். மேலும், உங்களுக்கு பிடித்த வேலைகளில் கவனம் செலுத்த முடியும். மனதளவில் மிகவும் நன்றாக உணர்வீர்கள். வேலை தொடர்பாக இருந்துவந்த பிரச்சனையும் தீர்க்கப்படும். புதிய வாய்ப்புகளையும் பெறலாம். வாரத்தின் ஆரம்பம் வியாபாரிகளுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருந்தாலும், அதற்குப் பிந்தைய காலம் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். திடீரென்று லாபம் ஈட்ட ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் குடும்பத்தாருடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், உங்கள் வருமானத்திற்கு ஏற்ப நீங்கள் செலவு செய்வது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இந்த ராசி மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமானதாக இருக்கும். கல்வித் துறையில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். காதல் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு நல்ல ஆச்சரியத்தை அளிக்கலாம். நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதிலிருந்து வந்த பிரச்சனை தீர்க்கப்பட வலுவான வாய்ப்புள்ளது.
பணம் சம்பந்தமாக பிரச்சனைகள் உங்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியவது அவசியம். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விடாதீர்கள். அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைய, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பதைத் தவிர்க்கவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இந்த ஏழு நாட்களும் மிதுன ராசியினருக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பாதகமான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடலாம். நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், வரவிருக்கும் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம். வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், உங்கள் கவனக்குறைவால் உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம். பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, இந்த வாரம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும்.
சரியாக சேமிக்கவும் முடியும். வேலையில் பரபரப்பாக இருப்பதால் குடும்பத்திற்கு அதிக நேரம் ஒதுக்க முடியாது. முடிந்தால், வார இறுதியில் அவர்களுக்கு நல்லதைத் திட்டமிட முயற்சிக்கவும். வார இறுதியில் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களின் உதவியுடன், உங்கள் முக்கிய பிரச்சனைகள் எதையும் தீர்த்திட முடியும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு நல்ல அறிகுறிகளைக் கொடுக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். இந்த காலகட்டத்தில் உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால், லாபம் ஈட்ட பெரிய வாய்ப்பைப் பெறலாம். பண விஷயங்களில் நீங்கள் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கலாம். சில பழைய குடும்பக் கடனை அடைப்பதிலும் நீங்கள் வெற்றி பெறலாம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். உங்கள் கல்வி தொடர்பான பிரச்சனைகள் தீரும். மாணவர்கள் விரும்பும் கல்லூரியில் சேர்க்கை பெற விரும்பினால், உங்கள் விருப்பம் நிறைவேறும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். நீங்கள் மிகவும் நேர்மறையாக உணர்வீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அவசரப்பட வேண்டாம். உங்கள் அதீத நம்பிக்கை உங்களைச் சிக்கலில் மாட்டிவிடும். அலுவலகத்தில் நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் சற்று சவாலானதாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் கடுமையான அணுகுமுறை உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். வியாபாரிகள் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிறைய பணம் செலவழிக்க வாய்ப்புள்ளது. கடினமான காலங்களில் உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். உங்கள் நிதி நிலைமையை மனதில் வைத்து எந்த முடிவும் எடுங்கள். உங்கள் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். நீங்கள் மிகவும் எரிச்சலாகவும் உணரலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் துணையுடன் மறக்க முடியாத நேரத்தைச் செலவிடுவீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், உங்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம்.
பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் உயரும். இந்த காலகட்டத்தில், நீங்கள் புதிய சொத்து, வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கவும் திட்டமிடலாம். வேலை தொடர்பான முடிவுகளை முழு நம்பிக்கையுடன் எடுப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகம் செய்தால் அதிக லாபம் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த நேரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இருப்பினும், நீங்கள் தொடர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவதால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். நீங்கள் புதிய வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். ஆனால், பெரிய செலவுகளை யோசிக்காமல் எடுப்பதைத் வேண்டும்.
உறவுகளில் அன்பும் இனிமையும் நிலைத்திருக்கும். பாதகமான சூழ்நிலைகளில், உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய முடியும். அத்தகைய சூழ்நிலையில், உங்களிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான கவலைகள் நீங்கி உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உணவுப் பழக்கத்தில் எந்த இடையூறும் செய்யாதீர்கள். இல்லையெனில், உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு சவாலானதாக இருக்கும். குறிப்பாக இந்த நேரத்தில், உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள். வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளால், உங்களின் சில முக்கியமான வேலைகள் தடைபடலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிக எரிச்சலை உணருவீர்கள்.
உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் முன்னேற்றம் தடைபடலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருந்தாலும், தேவைக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். பண பரிவர்த்தனைகள் செய்ய இந்த நேரம் ஏற்றது அல்ல. குடும்ப உறுப்பினருடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கோபத்தையும் அவசரத்தையும் தவிர்க்கவும். இல்லையெனில், வீட்டின் அமைதி குலைந்து போகலாம். இந்த காலகட்டத்தில், நீங்கள் நீண்ட தூர பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இந்த நேரம் குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் உங்கள் பிரச்சனைகளில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம். அலுவலகத்தில் நீங்கள் நேர்மறையான முடிவுகளைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. இருப்பினும், மிகவும் கடினமாக உழைப்பதால், இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் சோர்வாக உணருவீர்கள்.
வேலை கிடைக்காதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். நீங்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பினால், உங்கள் பாதையில் இருந்துவந்த நிதிப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. இந்த வாரம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கலவையானதாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே, தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பெற்றோரின் ஆசியுடன், நிலுவையில் உள்ள வேலையை முடிக்க முடியும். நீங்கள் உங்கள் குடும்பத் தொழிலுடன் தொடர்புடையவராக இருந்தால், உங்கள் கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் பெரிய வெற்றியைப் பெறலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் மிகவும் பரபரப்பாக இருக்கும். நிலுவையில் உள்ள பணி சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் திடீர் நிதி ஆதாயத்தையும் பெறலாம். இருப்பினும், அதிகரிக்கும் தொடர் செலவுகளால் சற்று கவலையுடன் இருப்பீர்கள். இந்த வாரம் நீங்கள் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த வாரம் காதல ஜோடிகளுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பணத்தைப் பற்றிய கவலைகள் இருக்கும். வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கக்கூடும்.
நீங்கள் ஏதேனும் கடன் வாங்கியிருந்தால், அதைத் திருப்பிச் செலுத்துவதற்கான அழுத்தமும் உங்கள் மீது அதிகரிக்கலாம். அலுவலகத்தில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். வணிகர்னய் முன்னேற்றம் அடைய விரும்பினால், சில புதிய திட்டங்களை உருவாக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனக்குறைவாக இருக்காதீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில், உங்களுக்குள் புதிய ஆற்றலை உணருவீர்கள். மேலும், நீங்கள் மிகவும் நேர்மறையாக இருப்பீர்கள். உங்கள் மகிழ்ச்சி உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும். குடும்ப வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்து உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.
வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலை வெளிநாட்டில் விரிவுபடுத்த திட்டமிடும், தொழிலதிபர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். வார இறுதியில் திடீர் பண வரவு கிடைக்கலாம். சொத்து தொடர்பான ஏதேனும் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தால், உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரலாம். உங்கள் உடல்நிலை மிகவும் நன்றாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











