Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
வார ராசிபலன் (15 December - 21 December 2024)- இந்த வாரம் இந்த ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரும்...
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 2024 டிசம்பர் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்நிலையில் நிதானமாக பேசி பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு பல புதுவிதமான யோசனைகள் மனதில் தோன்றும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் இந்த வாரம் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிதி ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்கும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் மன ரீதியான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். காதலித்து வந்தால், காதலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் நிதி நிலை மோசமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெற முயற்சிப்பீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் குடும்ப பொறுப்புக்களை சிறப்பாக சமாளிப்பீர்கள். தாயாரின் ஆரோக்கியம் மற்றும் வாகனத்திற்காக நிறைய பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். இந்த வாரத்தில் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் மன ரீதியான பிரச்சனைகளை அதிகம் சந்திப்பீர்கள். குடும்ப வாழ்க்கையிலும் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். இந்த வாரத்தில் கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் உங்களிடம் ஒப்படைத்த வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கத்தில் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நிறைய நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் சோம்பேறித்தனத்துடன் இருப்பீர்கள். சுப காரியங்களுக்கு நிறைய பணத்தை செலவிட வேண்டியிருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கப்பட்ட வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். ஆனால் இந்த வாரத்தில் உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வணிகர்கள் சில முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். சுப காரியங்களுக்கு நிறைய பணத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மன அமைதி கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் உங்களுக்கு வழங்கப்படும். இது உங்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும் அதே வேளையில், மன அழுத்தத்தையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வார தொடக்கத்தில் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், காதலும் நிறைந்திருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் சந்திக்கலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கலாம். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வார தொடக்கத்தில் பழைய கடன்களை அடைத்து வெற்றி பெறுவீர்கள். எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டாலும், அவற்றை எளிதில் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். எந்த புதிய வேலையையும் இந்த வாரத்தில் தொடங்காதீர்கள். இல்லாவிட்டால் இழப்பை சந்திப்பீர்கள். புதிய வருமான ஆதாரங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
