வார ராசிபலன் (08 June 2025-14 June 2025)- இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு போராட்டம் நிறைந்ததாக இருக்கும்

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2025 ஜூன் 08 ஆம் தேதி முதல் 2025 ஜூன் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 08 June 2025 To 14 June 2025 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று போராட்டம் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காது. இந்த வாரம் உங்களின் வேலைகள் சரியாக முடிக்கப்படாததால், மனதில் அமைதியின்மை ஏற்படும். நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுங்கள். இந்த வாரம் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு மற்றும் இரத்தம் தொடர்பான பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் தோன்றக்கூடும். உங்கள் துணையுடன் அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் கிடைக்கும். திட்டமிட்ட வேலையை சரியான நேரத்தில் முடிக்க சோம்பலை கைவிட்டு கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். பொறுமையுடன் இருந்தால், உங்கள் கடின உழைப்பு பலனளிக்கும். பணிபுரிபவர்களுக்கு சாதாரணமாக இருக்கும். வாரத்தின் பிற்பகுதியில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருந்தாலும் இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும். உறவுகளைப் பொறுத்தவரை சாதாரணமாக இருக்கும். பெருமை மற்றும் கோபத்தால் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். மன அழுத்தம் காரணமாக தூக்கமின்மை அல்லது தலைவலி ஏற்படக்கூடும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வார தொடக்கத்தில் நீண்ட அல்லது குறுகிய பயணத்தை மேற்கொள்ளலாம். உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். பணிபுரிபவர்கள் சில சவால்களை சந்திக் நேரிடும். மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். திடீரென்று பெரிய செலவுகள் வரக்கூடும். அதற்காக கடன் வாங்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கலாம். வார இறுதியில், வேலையில் மெதுவான முன்னேற்றம் மற்றும் சிறிது லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நல்லுறவைப் பேண வேண்டும். எந்த சர்ச்சையிலும் சிக்குவதைத் தவிர்க்கவும், கோபம் மற்றும் அவசரத்திலிருந்து விலகி இருங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் பயனுள்ளதாக இருக்கும். உற்சாகத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். முதலீடு செய்வதற்கு முன் முழுமையான தகவல்களையும் ஆலோசனைகளையும் பெறுங்கள். நிலம், வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க பெரிய செலவுகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. வணிகத்துடன் தொடர்புடையவர்கள் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். பணிபுரியும் பெண்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உறவுகள் இனிமையாக இருக்கும். ஆனால் பெரிய முதலீடுகள் அல்லது நிதி முடிவுகளில் கவனமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் மெதுவான முன்னேற்றத்துடன் தொடங்கும். ஆனால் போக போக எதிர்பார்த்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிலம் அல்லது சொத்து தொடர்பான பிரச்சினைகள் கவலையை ஏற்படுத்தக்கூடும். குடும்பத்தினரும் நலம் விரும்பிகளும் உங்களை ஆதரிப்பார்கள். வாரத்தின் நடுப்பகுதியில் பெரிய பரிவர்த்தனைகள் காரணமாக நிதி நிலைமை நிலையற்றதாக இருக்கும். ஆனால் இறுதியில் பணம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உறவுகளில் ஒத்துழைப்பும், அன்பும் இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். எந்த பெரிய முடிவையும் அவசரப்பட்டு எடுக்காதீர்கள். நண்பர்களின் ஆலோசனையைப் பெற்ற பின் எந்த முடிவையும் எடுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் சில நேரங்களில் இனிமையாகவும், சில நேரங்களில் சவாலாகவும் இருக்கும். வார தொடக்கத்தில் வேலை மற்றும் குடும்பப் பிரச்சினைகளை சந்திக்கலாம். ஆனால் பெரியவர்களின் ஆலோசனையால் அப்பிரச்சனை முடிவுக்கு வரும். தொழிலில் செலவுகள் அதிகமாக இருக்கலாம், எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பழைய நோய்கள் மீண்டும் தலைதூக்கலாம். கடன், எதிரிகள் மற்றும் நோய்களில் கவனமாக இருங்கள். குடும்பத்தில் இளைய சகோதரர்களின் உணர்வுகளை மதிப்பது முக்கியம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் நன்றாக இருக்கும். வேலைகளை சரியான நேரத்தில் முடித்து வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்கள் தொழிலில் லாபம் பெறுவார்கள், ஆனால் ஆபத்தான முதலீடுகளைத் தவிர்ப்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது விரும்பிய இடமாற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். இந்த வாரம் இல்லத்தரசிகளுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் சுமாராக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். இதனால் மனம் அமைதியற்று இருக்கும். தொழில் மற்றும் வணிகம் தொடர்பான முடிவுகளை கவனமாக எடுங்கள். வேலை செய்பவர்கள் உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கவனமாக வாகனம் ஓட்டுங்கள். வார இறுதியில், வேலையில் விரும்பிய முன்னேற்றம் கிடைக்காததால் விரக்தி ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை, மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். தொழில், வணிகம் மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்துவதில் உங்களுக்கு சிரமம் இருக்கலாம். குடும்பத்தில் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் கூடுதல் சுமை இருக்கும். அதற்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து, உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் உங்கள் துணைவரின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சச்சரவுகளில் இருந்து விலகி, பணிவுடன் இருங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் நன்றாக இருக்கும், திட்டமிட்ட முறையில் உழைத்தால், எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியும் லாபமும் கிடைக்கும். சோம்பலை விட்டுவிட்டு கடினமாக உழைக்க வேண்டும். வாரத்தின் தொடக்கத்தில், லாபகரமான திட்டத்தில் சேர வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடமிருந்து ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். காதல் உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். மொத்தத்தில் இந்த வாரம் சோம்பலை விட்டுவிட்டு வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் கலவையாக இருக்கும். நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரத்தின் தொடக்கத்திலிருந்து பணத்தை முறையாக நிர்வகிக்க வேண்டும். வாரத்தின் நடுப்பகுதியில் குழப்பம் ஏற்படலாம். எனவே யார் பேச்சையும் கேட்டு முடிவெடுப்பதைத் தலிர்க்க வேண்டும். தொழில் மாற்றம் மற்றும் இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, இது நன்மை பயக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் கடந்த வாரத்தை விட சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட பணிகள் சரியான நேரத்தில் முடிக்கப்படும், குடும்பத்தினரிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். காதல் உறவுகள் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நல்லிணக்கத்தைப் பேணுங்கள். வணிக வர்க்கத்தினர் சந்தையில் ஏற்படும் ஏற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion