Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
வார ராசிபலன் (08 December - 14 December 2024)- இந்த வாரம் இந்த ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 டிசம்பர் 08 ஆம் தேதி முதல் 2024 டிசம்பர் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சொத்து சம்பந்தமாக உங்கள் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்த வாரம் யோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். எதில் கையெழுத்து போடுவதாக இருந்தாலும் கவனமாக யோசித்த பின்னரே போட வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! வாரத்தின் தொடக்கத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களான பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவை கிடைக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுகு நல்ல செய்திகள் வந்து குவியும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு வலுவடையும். காதலித்து வந்தால், காதல் திருமணம் நடைபெறலாம். நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உணர்ச்சிகளின் காரணமாக நீங்கள் தவறான முடிவுகளை எடுக்கலாம். சில காரணங்களால் வீட்டில் பதற்றமான சூழல் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் அவமானத்தை சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் நல்ல செய்திகள் நிறைந்ததாக இருக்கும். வார தொடக்கத்தில் நல்ல செய்திகள் வரும். குடும்பத்துடன் எங்காவது வெளியூர் செல்ல திட்டமிடலாம். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் புதிய வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில் தொடங்க இது ஒரு நல்ல வாரம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் சிறப்பாக இருக்கும், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த உங்கள் வேலைகள் வெற்றியடையும். வணிகர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கம் இருக்கும். மேலும் இந்த வாரம் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
தலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று தொழில் ரீதியாக வாய்ப்புகள் நிறைந்த வாரமாக இருக்கும். பணியிடத்தில் நேர்மைக்காக பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். உங்கள் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிச்சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கை டென்சனாக இருக்கும். மூன்றாம் நபரால் பிரச்சனை வரலாம். எனவே இந்த வாரம் மற்றவர்களின் பேச்சை கேட்டு நடக்காதீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் ஆசைப்பட வேலைகள் ஒவ்வொன்றும் முடிவடையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உடற்பயிற்சியை செய்யுங்கள். வேலையில் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் செய்யும் சிறு தவறும் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக்கும். எனவே பணியிடத்தில் கவனமாக இருங்கள். வியாபாரிகள் ஒவ்வொரு முடிவையும் சிந்தித்து எடுக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் முழுமையடையாத பணிகளை முடிக்க உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். மாணவர்கள் நற்செய்திகளைப் பெறுவார்கள். குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ள திட்டமிடலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எனவே ஒவ்வொரு பிரச்சனையையும் அமைதியாகப் பேசித் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். நிதி நிலை பலவீனமாக இருக்கும். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர ஒருங்கிணைப்பு மோசமடைய வாய்ப்பு உள்ளது. காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் கடினமாக இருக்கும். எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன், வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். காலநிலை மாற்றத்தால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். பணிபுரிபவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த வாரம் நற்செய்திகளைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











