வார ராசிபலன் (04 May 2025-10 May 2025)- இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கு.. உஷார

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2025 மே 04 ஆம் தேதி முதல் 2025 மே 10 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 04 May 2025 To 10 May 2025 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த வாரம் விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் திட்டமிட்டு வேலை செய்தால், நல்ல வெற்றி கிடைக்கும். இந்த வாரம் சோம்பல் மற்றும் பெருமையைத் தவிர்க்க வேண்டும். வியாபாரிகளுக்கு வாரத்தின் முதல் பாதி இரண்டாம் பாதியை விட மிகவும் நல்லதாகவும் லாபகரமாகவும் இருக்கும். செல்வம் பெருகும். மற்றவர்களை அதிகம் நம்புவதைத் தவிர்க்க வேண்டும். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். காதல் உறவுகள் ஆழமாகும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் சூழ்நிலைகளை மனதில் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும். கோபப்படுவதன் மூலமோ அல்லது உணர்ச்சிவசப்பட்டோ எந்த முடிவையும் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால் பின்னர் வருத்தப்பட வேண்டியிருக்கும். வாரத்தின் முதல் பாதியில் உங்கள் உடல்நலம் மற்றும் உறவுகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பணியிடத்தில் போராட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகளுக்கு பின்னர் தான் வேலையில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக முடிவெடுக்க வேண்டும். உறவுகளில் பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைப் பராமரிக்க, உங்கள் துணையின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மங்களகரமானதாகவும், சிறப்பாகவும் இருக்கும். திட்டமிட்ட வேலை சரியான நேரத்தில் முடிவடையும். ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக அளவு பணம் செலவிட நேரிடும். பெரிய செலவுகள் இருந்தாலும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். பணியிடத்தில் மூத்தவர்கள் மற்றும் சக ஊழியர்கள் போன்றவர்களுடனான உறவுகள் நன்றாக இருக்கும். பணியிடத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். குழந்தைகளின் கல்வி குறித்த பெரிய கவலைகள் தீர்க்கப்படும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். நிலம், கட்டிடங்கள் போன்றவற்றை வாங்குவது மற்றும் விற்பதன் மூலம் லாபம் கிடைக்கும். காதல் உறவுகள் ஆழமாகும். கணவன் மனைவி இடையேயான பிணைப்பு அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். இந்த வாரத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி மிகவும் மங்களகரமானதாகவும் நன்மை பயக்கும் விதமாகவும் இருக்கும். எனவே முக்கியமான வேலைகளை வாரத்தின் இரண்டாம் பாதியில் செய்வது நல்லது. நிலம், சொத்து போன்றவற்றை வாங்குவதிலும் விற்பதிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வாரத்தின் பிற்பகுதியில், வணிகர்கள் தங்கள் வணிகம் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். நண்பர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். பணத்தை தேவையற்ற விஷயங்களுக்குச் செலவிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சிறந்த உறவுகளைப் பராமரிக்க, யாருடைய உணர்வுகளையும் புறக்கணிக்காதீர்கள். காதல் விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும், நன்மை பயக்கும் வாரமாகவும் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை இருக்கும். வசதி மற்றும் ஆடம்பரம் தொடர்பான விஷயங்களுக்கு தாராளமாக செலவு செய்வீர்கள். வாரத்தின் முதல் பாதியில் மிகப்பெரிய கனவு நனவாகலாம். நிலம், கட்டிடம், வாகனம் போன்றவற்றால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சாதாரணமாக இருக்கும். வாரத்தின் முதல் பாதியில், தொழில் மற்றும் வணிகம் தொடர்பாக நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. புத்திசாலித்தனத்தால் நிலுவையில் உள்ள பல பணிகளை முடிப்பீர்கள். வேலை செய்பவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். காதல் உறவு வலுவடையும். பெற்றோருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் கலவையாக இருக்கும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் மற்றும் உறவுகள் குறித்து அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையில்லாத பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த வாரம் பணத்தை சரியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை சரியான நேரத்திலும் செய்ய வேண்டும். சிறு தவறு செய்தாலும், உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் கவனமாக பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும். குடும்பப் பொறுப்புகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். உடன்பிறந்தவர்களின் உணர்வுகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் மங்களகரமானதாகவும், நன்மை பயக்கும் வாரமாகவும் இருக்கும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில வேலைகள் முடிவடையும். வீடு மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். வார தொடக்கத்தில் திடீர் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். இந்த வாரம் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த பெரிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு முற்றிலும் சாதகமாக இருக்கும். உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவுகள் நன்றாக இருக்கும். கணவன் மனைவி இடையேயான உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு பரபரப்பாக இருக்கும். வார தொடக்கத்தில் சில புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் சில திடீர் பெரிய மாற்றங்கள் பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம். இலக்குகளை அடைய நீங்கள் கூடுதல் கடின உழைப்பையும் முயற்சியையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் பிரச்சனைகளுடன் வீட்டுப் பொறுப்புகளையும் நிறைவேற்றுவது உங்களுக்கு ஒரு சவாலாக இருக்கும். இந்த வாரம் ஆரோக்கிய பிரச்சினைகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். உறவினர்களுடன் ஏதாவது ஒரு பிரச்சனையால் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வார தொடக்கத்தில் திட்டமிட்ட வேலைகள் சரியாக முடிவடைக் காண்பீர்கள். உங்களின் நிதி பிரச்சனைகள் தீர்க்கப்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பல்வேறு மூலங்களிலிருந்து வருமானம் ஈட்ட வாய்ப்பு இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பையும் முயற்சிகளையும் உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். வாரத்தின் பிற்பகுதி முதல் பாதியை விட மிகவும் சிறப்பாக இருக்கும். செல்வாக்கு மிக்கவர்களை சந்திப்பீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தந்தையிடமிருந்து உங்களுக்கு சிறப்பு உதவி மற்றும் ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் கடினமாக உழைத்தால், வேலையில் வெற்றியையும் லாபத்தையும் பெறலாம். எந்தவிதமான கவனக்குறைவையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் உடல் மற்றும் நிதி பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து சரியான நேரத்தில் உதவி கிடைக்காததால் நீங்கள் சற்று ஏமாற்றமடையக்கூடும். வாரத்தின் பிற்பகுதி முதல் பாதியை விட சற்று நிம்மதியாக இருக்கும். சிறிது போராட்டத்துடன் வேலைகள் முடிவடையும். வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வணிகம் மற்றும் நிதி விஷயங்கள் உங்களை பிஸியாக வைத்திருக்கும். காதல் உறவில் பொறுமையின்மை அல்லது தற்பெருமை காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொழில் மற்றும் வணிகத்தில் சாதகமான சூழ்நிலை இருக்கும். வேலை தேடுபவர்கள் மற்றும் வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். நிலம், கட்டிடம் அல்லது பரம்பரை சொத்து வாங்குவதில் இருந்த தடைகள் நீங்கும். பொருள் மகிழ்ச்சியும் வளங்களும் அதிகரிக்கும். இந்த வாரம் பெரும்பாலும் லாபமும் முன்னேற்றமும் நிறைந்ததாக இருக்கும். இந்த வாரம் மேற்கொள்ளும் பயணம் இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அரசியலுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். காதல் விவகாரங்கள் முற்றிலும் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். வணிகம் மற்றும் வீடு தொடர்பான நிதி விஷயங்கள் தீர்க்கப்படும். வேலை செய்பவர்களுக்கு பல்வேறு மூலங்களிலிருந்து வருமானம் கிடைக்கும். செல்வம் அதிகரிக்கும். வாரத்தின் நடுப்பகுதியில், சிறந்த முடிவுகளை எடுக்கலாம். வணிகத் திட்டத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையில் அதிக மும்முரமாக இருப்பீர்கள். இது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வாரம் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவது கடினமாக இருக்கும். நட்பு காதலாக மாறும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, May 4, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion