Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
வார ராசிபலன் (03 August 2025-02 August 2025)- இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2025 ஆகஸ்ட் 03 ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 09 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உற்சாகமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். இருந்தாலும் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்க வேண்டும். குடும்ப விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் தலைவலி, சோர்வு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முதலீடுகளை செய்வதாக இருந்தால், அதைத் தவிர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இந்த வாரத்தில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும். கருத்துக்கள் அனைவராலும் பாராட்டப்படும். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். பேச்சில் சற்று கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்திறனை வெளிக்காட்ட வேண்டிய வாரம் இது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். திட்டமிட்டு எந்த வேலையை செய்தாலும், பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. காதல் வாழ்க்கையில் நேர்மை மிகவும் முக்கியம். இந்த வாரத்தில் தவறான புரிதல் காரணமாக தம்பதிகளிடையே பிரச்சனைகள் அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் சாதனைகளைப் புரிவீர்கள். நீண்ட நாள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். தலைமைத்துவ திறன் மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். எந்த ஒரு பிரச்சனைக்கும் கவனமாக தீர்வுகளை கண்டறிய வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வாழ்க்கையின் சில முக்கியமான முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். வேலையில் திடீர் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல ஆதாயங்களைத் தரும். கலை துறையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையில் உங்களின் செயல்திறன் மேம்படும். அதே சமயம் உடன் வேலை செய்வோர் உங்களை கண்டு அதிக பொறாமை கொள்வார்கள். நீதிமன்ற வழக்குகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. குடும்ப விஷயங்களில் எதையும் கவனமாக கையாள வேண்டும். தன்னம்பிக்கையை கைவிடக்கூடாது. ஏனெனில் இந்த தன்னம்பிக்கை தான் உங்களின் பெரிய பலம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள நேரிடும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலைகளை செய்பவர்களுக்கு நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உறவுகளில் வெளிப்படைத்தன்மையைப் பேண வேண்டும். இந்த வாரம் நெருக்கமான ஒருவரின் ஆலோசனை வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக சற்று சவாலானதாக இருக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த தவறாதீர்கள். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவதை சுமாராகவே இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உறவுகளில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்காது. விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணங்களை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் நேர மேலாண்மை மிகவும் முக்கியம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் கற்பனைத்திறன் சிறப்பாக இருக்கும். கலை, எழுத்து போன்ற துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளின் படிப்பு குறித்த கவலை அதிகரிக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











