Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
Weekly Career Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றிகள் குவியப் போகுது..
Weekly Career Horoscope: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொரு வாரமும் வேறுபடும். குறிப்பாக தொழில் ரீதியாக பல மாற்றங்களைக் காணலாம்.
உங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 29 செப்டம்பர் 2024 முதல் 05 அக்டோபர் 2024 வரையிலான காலகட்டமானது ஒருவருக்கு தொழில் ரீதியாக எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் விரும்பிய வேலையைப் பெறுவார்கள். வெளிநாடு செல்லும் ஆசை இருந்தால், நல்ல வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதனால் இந்த வாரம் தொழில் ரீதியாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் சற்று நன்றாக நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் பேச்சாலேயே உங்களின் வேலை பாழாகும். இருப்பினும் வாரத்தின் இரண்டாம் பாதியில் நல்ல வெற்றி கிடைக்கும்
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். இதுவரை செய்த கடின உழைப்புக்கான பலன் இந்த வாரத்தில் கிடைக்கும். இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். வியாபாரிகள் பெரிய அளவில் லாபத்தைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால் விரும்பிய வேலையைப் பெற வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அப்படி கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைப்பது சற்று கடினம் தான். இருந்தாலும் கடின உழைப்பை தொடர்ந்தால், நல்ல பலனை நிச்சயம் பெறலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். படிப்பை முடித்த மாணவர்கள் அரசு வேலைக்காக தேர்வு எழுதினால் வெற்றி பெறலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். இதுவரை செய்த கடின உழைப்புக்கான பலன் இந்த வாரத்தில் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தால், விரும்பிய வேலை கிடைக்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலியைப் பொறுத்தவரை அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல பலனைத் தருவதாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைப்பது சந்தேகம். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போவதால், எதிர்மறை எண்ணங்கள் மனதில் அதிகரித்து, மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் வெற்றியை உடனே பெற முடியாது. அதற்காக முயற்சியைக் கைவிடக்கூடாது. தொடர்ந்து கடினமாக உழைத்தால், விரைவில் நற்பலனைப் பெறலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அரசு வேலைக்காக தேர்வுகளை எழுதியிருந்தால், அதிலிருந்து நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











