Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
விஜய தசமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Vijayadashami 2025: வேத நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் விஜய தசமி அக்டோபர் 02 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தின் படி விஜய தசமியானது சற்று சிறப்பானது. ஏனெனில் இந்த நாளில் பல சுப யோகங்கள் உருவாகவுள்ளன. அதுவும் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் இந்நாளில் பல யோகங்களை உருவாக்கவுள்ளார்.
தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் குரு பகவான் இருப்பதால், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது அம்சங்களாலோ, சுப யோகங்களை உருவாக்குவார். அந்த வகையில் குரு பகவான் விஜய தசமி நாளில் புதனுடள் ஒன்றிணைந்து கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்கவுள்ளார்.

ஜோதிடத்தின் படி, அக்டோபர் 2 ஆம் தேதி புதனும், குரு பகவானும் ஒருவருக்கொருவர் 90 டிகிரியில் இருந்து, கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது புதன் குருவால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
கேந்திர திருஷ்டி யோகத்தால் மேஷ ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு வலுவடையும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். நீதிமன்றம் தொடர்பான வழக்குகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கேந்திர திருஷ்டி யோகமானது அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. அதுவும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தாயுடனான உறவு இனிமையாக இருக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நிதி நிலையும் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.
தனுசு
கேந்திர திருஷ்டி யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் நிதி நிலையில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் தீரும். சொத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications