Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
சுக்கிரனால் தீபாவளிக்கு முன் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்படப்போகுது...
Venus Transit In Virgo Before Diwali 2025: வேத ஜோதிடத்தின் படி, அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆரம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். கிரகங்களில் சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் ஒருவரது நிதி நிலை, காதல் வாழ்க்கை போன்றவற்றில் தாக்கம் தெரியும். மேலும் ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் தான், அந்நபர் நல்ல செழிப்பான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார். அந்த வகையில் சுக்கிரன் தீபாவளிக்கு முன், அதுவும் அக்டோபர் 09 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார்.

புதனின் ராசிக்கு சுக்கிரன் செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதுவும் சில ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் காணவுள்ளனர். முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது தீபாவளிக்கு முன் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படவுள்ளது. சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பள்ளது. சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்களின் பிள்ளைகள் இக்காலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிக்கிய பணத்தைப் பெறுவார்கள். இதன் விளைவாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சுக்கிரனின் அருளால் ஆளுமை மேம்படும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தந்தையுடனான உறவு வலுவடையும். சொல்லப்போனால் இந்த சுக்கிர பெயர்ச்சியால் இதுவரை வாழ்வில் சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, வாழ்க்கை செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் மாறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications