Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் டிசம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Venus Transit In Thiruvonam Nakshatra On 11 December 2024: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். முக்கியமாக இவர் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுவதால், ஒருவர் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பான நிலையில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சுக்கிரன் குறிப்பிட்ட காலஇடைவெளியில் ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
தற்போது சுக்கிரன் மகர ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் டிசம்பர் 02 ஆம் தேதி தான் மகர ராசிககுள் நுழைந்தார். இந்நிலையில் டிசம்பர் 11 ஆம் தேதி சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நிகழவுள்ளது. இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சுக்கிரன் திருவோண நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த திருவோண நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். இது ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் 22 ஆவது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் மகர ராசியில் அமைந்துள்ளது.

திருவோண நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பரிபூர்ண அருளால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் விளைவாக பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். மேலும் நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் மற்றும் அதனால் நிறைய நன்மைகளும் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கன்னி
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை தேடி வரலாம். இக்காலத்தில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வணிகர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் நிதி நிலை உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பத்தை பெறுவார்கள். நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்புபள்ளது. வியாபாரிகளின் திட்டங்கள் வெற்றி பெற்று, அதன் மூலம் நிறைய லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications