சுக்கிர பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க மூட்டை மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க..

Venus Transit In Taurus On June 2025: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் மே மாத இறுதியில் சுக்கிரன் செவ்வாயின் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பின் ஜூன் மாத இறுதியில் சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். பொதுவாக சுக்கிரன் ஒரு ராசியில் ஒரு மாத காலம் பயணிப்பார்கள். இதனால் இவர் ஒரு சுழற்சியை முடிக்க 12-13 மாதங்கள் ஆகும்.

Venus Transit In Taurus On June 2025 These Zodiac Signs Will Get More Money Benefits

அந்த வகையில் சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு ஜூன் 19 ஆம் தேதி செல்லவுள்ளார். தனது சொந்த ராசிக்கு சுக்கிரன் செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. அதுவும் அதிர்ஷ்டம் பிரகாசித்து, பணத்தையும், வெற்றியையும் குவிக்கப் போகிறார்கள். இப்போது ரிஷபம் செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு நன்றாக இருக்கும்.

பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் பாராட்டைப் பெறுவதோடு, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறவும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வேலைகளில் வெற்றி கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள்.

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு வரன் தேடி வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

இதுவரை சனி 3 ஆவது வீட்டில் இருந்து, அவரது பார்வை 5 ஆவது வீட்டில் விழுவதால், சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் இந்த சுக்கிர பெயர்ச்சிக்கு பின் படிப்பில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல துணை கிடைக்கலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். பண வரவு சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, May 16, 2025, 21:44 [IST]
Desktop Bottom Promotion