Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
சுக்கிர பெயர்ச்சியால் ஜூன் 29 முதல் இந்த 3 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Venus Transit In Taurus On 29 June 2025: அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு, செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர். மேலும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் ஒரு மாத காலம் பயணிப்பார்.
இந்நிலையில் சுக்கிரன் ஜூன் மாத இறுதியில், அதாவது ஜூன் 29 ஆம் தேதி தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். 1 வருடத்திற்கு பின் சொந்த ராசிக்கு சுக்கிரன் செல்வது சற்று சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்கள் சுக்கிரனின் பரிபூர்ண ஆசியைப் பெற்று, தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை பெறுவார்கள். மேலும் நிதி நிலையில் மகத்தான உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இப்போது சுக்கிரன் ரிஷப ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்து, அதற்கு முயற்சித்தால், நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். வியாபாரிகள் பெரிய அளவில் லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வணிகர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் வெற்றிகள் குவியும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். உங்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதை இக்காலத்தில் தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
