Latest Updates
-
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம்
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் காட்டில் பணமழை கொட்டப் போகுது...
Venus Transit In Taurus Make Malavya Rajyog 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவார்.
அந்த வகையில் சுக்கிரன் ஜூன் 29 ஆம் தேதி தனது உச்ச ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ரிஷப ராசியில் சுக்கிரன் ஜூலை 26 ஆம் தேதி வரை இருப்பார். சுக்கிரன் ரிஷப ராசியில் நுழையும் போது, அது ஒருவரது பொருள் வசதிகள், செல்வம், சொத்து ஆகியவற்றை அதிகரிக்கும். மேலும் சுக்கிரன் ரிஷப ராசியில் நுழைவதால் மிகவும் மங்களகரமான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் தங்கள் தொழில், வருமானம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இப்போது சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மாளவ்ய ராஜயோகத்தால் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களைக் காண்பார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். நல்ல பொருள் வசதிகளைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். ஒட்டுமொத்தமாக, நிதி மற்றும் மன ரீதியாக சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகமானது மிகவும் மங்ளகரமானதாக இருக்கும். அதுவும் தொழிலில் நல்ல வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். நிதி ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வருமானம் மற்றும் நிதி ஆதாயம் அதிகரிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன. சமூகத்தில் உங்கள் மரியாதையும் அதிகரிக்கும். இது உங்கள் தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகமானது நிதி ரீதியாக வலிமையாக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தி புதிய வருமான வாய்ப்புகளைப் பெற வைக்கும். தொழிலிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிதாக ஏதாவது ஒன்றை கற்று, உங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்வீர்கள். சொத்து தொடர்பான திட்டங்களும் வெற்றிகரமாக முடியும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும், உறவுகளில் இனிமை இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகமானது தொழிலில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் காலமாகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இது உங்கள் ஆளுமையை மேம்படுத்தும். உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாகவும் லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. நிதி நிலை வலுபெறும். வாழ்க்கைத் துணைவருடனான உறவில் இனிமை இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இக்காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications