Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
தீபாவளிக்கு பின் சுக்கிரன் தனுசு ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வாக்கு உயரப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் அவ்வப்போது தங்கள் நிலையையும், ராசியையும் மாற்றிக்கொள்ளும். நவகிரகங்கள் மற்றும் 12 ராசிகளுக்கு இடையில் பெயர்ச்சி அடைவதால் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். இந்த ஆண்டு தீபாவளிக்குப் பிறகு சுக்கிரன் ராசி மாற்றம் அடைகிறது. இது அனைத்து ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தீபாவளிக்கு பிறகு நடக்கும் இந்த ராசி மாற்றம் 12 ராசிகளில் 3 ராசிகளுக்கு மிகவும் சாதகமான பலன்களை அளிக்கிறது.
தீபாவளிக்குப் பின் சுக்கிரன் தனுசு ராசியில் பிரவேசிக்க உள்ளார். இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் தீவிர தாக்கங்களை ஏற்படுத்தும். பெரும்பாலும் இது வாழ்க்கையில் எதிர்பாராத நிதி ஆதாயம், தொழிலில் முன்னேற்றம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவருகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இதனால் நற்பலன்களை பெறப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

கன்னி
சுக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு பல நன்மைகளைத் தரும். கன்னி ராசியின் நான்காம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தால் அவர்களின் நிதி நன்மைகள் அதிகரிக்கின்றன. நிதி விஷயங்களில் உங்களின் அதிர்ஷ்டம் மாறப்போகிறது. இந்த நேரத்தில் பல நன்மைகள் உங்களை தேடிவரும்.
வேலை தேடுபவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும், தொழிலில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்படும். உங்கள் தாய் மீது அன்பு அதிகரிக்கும், அனைத்து விஷயத்திலும் அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் பெரும் நன்மைகள் வந்து சேரும் காலமிது.
கும்பம்
சுக்கிரனின் சஞ்சாரம் கும்ப ராசியினருக்கு பல நன்மைகளைத் தரப்போகிறது, குறிப்பாக நிதி விஷயங்களில் அதிக நன்மை வந்து சேரப்போகிறது. வியாபாரத்தில் வருமானமும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதன் விளைவாக உங்களின் நிதி இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். வருமானம் பெருக, வாழ்க்கையும் பெருகும்.
தொழில்ரீதியாக நீங்கள் எதிர்பார்க்காத பலன்கள் கிடைக்கலாம். மேலும் வியாபாரம் செய்பவர்கள் அதன் மூலம் பல சாதகமான பலன்களைப் பெறலாம். உங்கள் முதலீடுகள் ஆச்சரியமளிக்கும் பலன்களை அளிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். மாணவர்கள் தங்கள் கல்வியில் அற்புதமான வெற்றியை அடையலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு சுக்கிரனின் சஞ்சாரம் அற்புதமான பலன்களை அளிக்கப்போகிறது. அவர்களின் 7வது வீட்டில் சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறுகிறது. இதன் விளைவாக, திருமண வாழ்க்கையில் பெரும்பாலும் எதிர்பாராத நன்மைகள் மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நீங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அன்பாக முன்னேறுவீர்கள்.
நிதிநிலை வெகுவாக முன்னேற வாய்ப்புள்ளது, வியாபாரத்தில் எதிர்பாராத பலன்கள் வந்து சேரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், அதன் மூலம் பல நல்ல மாற்றங்கள் நிகழ்கின்றன. சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்தும் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

