Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
நவம்பரில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுதாம்...உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் செல்வம், மகிழ்ச்சி, அழகு மற்றும் கலையுடன் தொடர்புடைய கடவுள் சுக்கிரனாவார். எனவே, சுக்கிரன் தனது ராசியை மாற்றும் போது, நட்சத்திரத்தை மாற்றும்போதும் அதன் பாதிப்பு அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும். சுக்கிர பெயர்ச்சியால் சிலருக்கு சாதகமான பலன்கள் உருவாகலாம், சிலருக்கு கடினமான நேரங்கள் வரலாம். இருப்பினும், சுக்கிரனால் நற்பலன்களே அதிகம் அப்படி அற்புதமான பலன்களை அனுபவிக்கும் காலம் வரும் நாட்களில் சிலருக்குக் கிடைக்கப் போகிறது.
நவம்பர் 7 முதல் டிசம்பர் 4 வரை சுக்கிரன் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்குத் தனிப்பட்ட ஆதாயங்களை கொடுக்கப் போகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
நவம்பர் 7 முதல் டிசம்பர் 4 வரை மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். அவர்கள் குடும்பத்தில் நல்ல அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். அதிக சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். வாழ்க்கையில் பல இனிமையான அனுபவங்கள் ஏற்படும்.
திருமண உறவில் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல காலம் வரும். வெளிநாட்டில் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வருகிறது. நண்பர்கள் மூலம் பெரிய உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த காலத்தில் நினைத்த வேலையை வெற்றிகரமாக முடிக்கலாம், குறிப்பாக காதல் தொடர்பான முயற்சிகள் வெற்றிகரமாக முடிவடையும். நீங்கள் விரும்பும் நபரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கலாம். திருமணமான தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வேலை தொடர்பான விஷயங்கள் மிக விரைவில் சிறப்பாக இருக்கும்.
வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு விரைவில் விசா கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி நெருக்கடிகள் குறைவதற்கு வாய்ப்புள்ளது, கடன்சுமை குறையும். பல நன்மைகள் கிடைத்தாலும், இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை உபயோகிக்கும்போது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாக இருந்தாலும், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அனைத்து விஷயங்களையும் பொறுமையுடன் அணுகினால், வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகளைக் கேட்கலாம்.
வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகால் தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு சொந்த ஊரிலேயே நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை உறவினர்களுக்கு கடன் கொடுக்காமல் கவனமாக இருங்கள். இந்த காலகட்டத்தில் அதிக அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற இது உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

