Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
சுக்கிரன் கிருத்திகை நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்கள் ராசியை மாற்றிக்கொள்கின்றன. அதேபோல தங்கள் நட்சத்திரத்தையும் மாற்றிக் கொள்கின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
செல்வம் மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரன் ஜூன் 26 அன்று கிருத்திகை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் ஆவார், சூரியனின் நட்சத்திரத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்த காலகட்டத்தில் அவர்கள் பல்வேறு வழிகளில் லாபம் ஈட்டலாம் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றங்கள் இருக்கும். சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் அபரிமிதமான முன்னேற்றத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
கிருத்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவை திறக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பெரிய அளவில் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்களின் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். மேலும் அவர்களின் கடந்த கால கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். திருமண வாழ்க்கையில், மகிழ்ச்சி நிறைந்திருக்கும், மேலும் வாழ்க்கைத் துணையுடன் உற்சாகமாக நேரத்தை செலவழிப்பார்கள்.
அவர்களின் முன்னேற்றத்திற்கு வாழ்க்கைத்துணை உதவியாக இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் கடன் நீண்ட காலமாக காத்திருந்த கடன் கிடைக்கலாம். அவர்களின் தொழில்முறை வாழ்க்கையில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வெற்றி பெறலாம் மற்றும் வேலையில் மேலதிகாரிகளிடமிருந்து மரியாதையைப் பெறலாம். அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், மேலும் அனைத்து திட்டங்களையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும்.
சிம்மம்
கிருத்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாற்றங்களை அளிக்கும். இதனால் அவர்கள் தங்கள் வணிகத்திலும், வேலையிலும் முன்னேற்றத்தை அடைய முடியும். மேலும், வணிகர்கள் ஒரு பெரிய திட்டம் அல்லது வாடிக்கையாளரால் பயனடைய முடியும். கலைஞர்கள் மற்றும் படைப்புத் துறைகளில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமான மாற்றங்களை அளிக்கும்.
வேலையில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் பதவி உயர்வுகளைப் பெறலாம் மற்றும் பணியிடத்தில் புதிய பொறுப்புகளை பெறலாம். அவர்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும், அவர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். திருமண வாழ்க்கையில், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். அவர்களின் ஆரோக்கியம் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கிருத்திகை நட்சத்திரத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் நேர்மறையான மாற்றங்களைக் கொடுக்கும். இந்தக் காலகட்டத்தில் புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், நிதி நிலைமை கணிசமாக மேம்படும், கடனாக கொடுத்த பணத்தைத் திரும்ப பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்திற்கான கதவு திறக்கும். இந்த காலகட்டத்தில் வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறலாம்.
நாட்டிற்குள்ளும் வெளிநாட்டிலும் பயணம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. வேலையில் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள், மேலும் சரியான நேரத்தில் அவற்றை முடிக்கவும் முடியும். குடும்ப வாழ்க்கையில், அமைதி நிலவும், வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவும் அவர்களுக்கு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் பழைய உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
