Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கபோகுது.. உங்க ராசி இதுல இருக்கா
Venus Transit In Kettai Nakshatra On 27 October 2024: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அது மனித வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது சுக்கிரன் விருச்சிக ராசியிலும், அனுசம் நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார். இந்நிலையில் தீபாவளிக்கு முன், அதாவது அக்டோபர் 27 ஆம் தேதி சுக்கிரன் கேட்டை நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். கேட்டை நட்சத்திரமானது புதனின் நட்சத்திரமாகும். புதனின் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியானது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

அக்டோபர் 27 ஆம் தேதி கேட்டை நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரன், இந்த நட்சத்திரத்தில் நவம்பர் 07 ஆம் தேதி வரை இருப்பார். இந்த நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இதனால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். மனம் நிம்மதியாக இருக்கும். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பலவிதமான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். பேச்சால் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை ஈர்ப்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறலாம். சிலருக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரலாம். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு பொற்காலமாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது பல நற்பலன்களை வழங்கும். அதுவும் சுக்கிரனுடன், புதனின் அருளும் கிடைத்து, பணியிடத்தில் செயல்திறன் மேம்பட்டு சிறப்பான வெற்றியைப் பெறக்கூடும். மேலும் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவும் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் பணத்தையும் சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மகிழ்ச்சியாகவும், இணக்கமாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
