Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சுக்கிர பெயர்ச்சியால் ஜூலை 26 முதல் சிம்மம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Venus Transit In Gemini On 26 July 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் ஒவ்வொரு முறை ராசியை அல்லது அதன் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் போதெல்லாம், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை 26 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன் ஆவார். இந்த மிதுன ராசியில் சுக்கிரன் ஆக்ஸ்ட் 20 ஆம் தேதி வரை இருப்பார். புதனின் ராசிக்கு சுக்கிரன் செல்வதால் எண்ணங்கள் மற்றும் பேச்சுக்களில் புதிய ஆற்றல் காணப்படும்.

சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக, நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும் காலமாக இருக்கும். அதோடு காதல் மற்றும் திருமண வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். இப்போது சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன் 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். சில பல நல்ல செய்திகளையும் பல வழிகளில் இருந்து பெறக்கூடும். தனிப்பட்ட உறவுகள் வலுவடையும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 3 மற்றும் 10 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன் 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து முழு ஆதரவும் கிடைக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். முக்கியமாக ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் குவியும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கவும் வாய்ப்புள்ளது. பல நல்ல செய்திகளையும் பெறக்கூடும். மேலும் எதிரிகளை வென்று வெற்றிகளைக் குவிப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், 8 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இதுவரை சந்தித்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவார்கள். காதல் வாழ்க்கை வழக்கத்தை விட சிறந்ததாகவும், இனிமையாகவும் இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலைமையில் நல்ல முன்னற்றம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாக பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு, வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
