சுக்கிரன் மகர ராசிக்கு செல்வதால் டிசம்பரில் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...

Venus Transit In Capricorn On 02 December 2024: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான், அந்நபர் நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். இப்படிப்பட்ட சுக்கிரன் ஒரு ராசியில் 26 நாட்கள் வரை பயணிப்பார்.

தற்போது சுக்கிரன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் டிசம்பர் 02 ம் தேதி மகர ராசிக்கு செல்லவுள்ளார். மகர ராசியின் அதிபதி சனி பகவான். சனி பகவானும், சுக்கிரனும் நட்பு கிரகங்கள். எனவே சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

Venus Transit In Capricorn On 02 December 2024 These Zodiac Signs Luck Will Shine

அந்த வகையில் சுக்கிரனின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சில ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். இப்போது சுக்கிரன் மகர ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இதன் விளைவாக ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். அதோடு சிலர் பயணங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல பலன்களைத் தருவதாகவும் இருக்கும். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். தொழில் ரீதியாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதன் மூலம் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். ஆனால் காலநிலை மாற்றத்தால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட கால முயற்சிகளுக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரலாம். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். சுக்கிரனின் ஆசியால் நிதி நிலை நன்றாக இருக்கும். மேலும் நிறைய பணத்தையும் சேமிக்க முடியும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, November 13, 2024, 23:45 [IST]
Desktop Bottom Promotion