சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைவதால் இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் பெரிய நஷ்டத்தை சந்திக்கப் போறாங்களாம்...!

Venus Transit in Cancer: சுக்கிரனின் சஞ்சாரம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. ஜூலை 7 ஆம் தேதி, சுக்கிரன் கடகத்தில் நுழைகிறார். இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பலன் தரும் ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் பொருளாதாரரீதியாக பெரிய பலனை தராது. ஜூலை 31 வரை சுக்கிரன் கடகத்தில் இருக்கிறார்.

சொல்லப்போனால் இந்த சுக்கிர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் அவர்கள் வாழ்க்கையில் பின்னடைவுகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப் போகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சுக்கிர பெயர்ச்சியால் பாதிப்படையப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Venus Transit in Cancer Give Financial Troubles to These Zodiac Signs

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களின் இரண்டு மற்றும் ஏழு வீடுகளுக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன் மேஷ ராசியின் நான்காவது வீட்டில் நுழைகிறார். இந்த காலகட்டத்தில், மேஷம் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கும்.

அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும் நேரம் இது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதால் சிகிச்சைக்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க முடியாது.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு ஒன்று மற்றும் ஆறு வீடுகளுக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி அவர்களின் மூன்றாவது வீட்டில் நடக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும்.

நிறைய இழப்புகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இந்த காலகட்டத்தில் அதிக மனஅழுத்தம் இருக்கும். இந்த காலகட்டத்தில் முதலீடுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசியின் மூன்று மற்றும் பத்தாவது வீடுகளுக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன் பன்னிரண்டாம் வீட்டில் கடக ராசிக்குள் நுழைகிறார். எல்லா விஷயங்களும் தோல்விக்கு உட்பட்டவைஅவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்விகளில் முடிவடைய வாய்ப்புள்ளது.

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சில பாதகமான மாற்றங்கள் ஏற்படும். வணிகர்களும் நிதி நெருக்கடியை சந்திப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது, மேலும் நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்காது.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் ஏழு மற்றும் பன்னிரெண்டு வீடுகளுக்கு அதிபதியாக சுக்கிரன் இருக்கிறார். சுக்கிரன் தங்கள் ஒன்பதாம் வீட்டில் கடக ராசிக்குள் நுழைகிறார். வாழ்க்கையில் பொதுவாக நிம்மதி இழப்பு ஏற்படும். வேலையில் ஆதரவின்மை இருக்கும். தொழிலதிபர்கள் மிகக்குறைவான லாபத்தையே எதிர்பார்க்கலாம். செலவுகள் அதிகரிக்கும் மற்றும் பணப் பிரச்சனைகளால் மிகவும் சிரமப்படுவீர்கள்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களின் ஆறு மற்றும் பதினொன்றாம் வீடுகளுக்கு அதிபதி சுக்கிரனாவார். சுக்கிரன் அவர்களின் 8வது வீட்டில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்காது. பணியில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடனும், உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். செலவுகள் அதிகரிப்பதால் மனஅழுத்தம் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, July 5, 2024, 23:40 [IST]
Desktop Bottom Promotion